ஆசிரியர்கள்
- அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்கி ஆசிரியர்கள் - அரசு
ஊழியர்கள் நலன்கள் பாதுகாத்து பெருமை கொள்ள வேண்டியது ஒரு அரசின் கடமை
மாறாக நடைமுறையில் இருந்து வரும் முன் ஊதிய உயர்வு ( Advance increment )
மற்றும் ஊக்க ஊதியத்தை ( Incentive ) நிறுத்தும் செயலை வன்மையாக
கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் படித்தால் மாணவர்கள் படிப்பார்கள் என்று
பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருக்கும் போது ஆசிரியர்கள் உயர்கல்வி
பயின்று அவர்களது அறிவாற்றலை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக
உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்கி ஆணை ( அரசாணை எண் : 42 நாள் : 10.01.1969
) பிறப்பித்தார். ஆனால் இன்றைக்கு தமிழக அரசு அவரது கொள்கைக்கு எதிராக
வெளியிட்டுள்ள அரசாணைகள் : 37 , நாள் : 10.3.20 மற்றும் 116 , நாள் :
15.10.2020 ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்துகிறோம் . அரசாணை எண் : 37 ,
நாள் : 10.3.2020 - க்கு தெளிவுரைகள் வழங்கிடுவதற்காக அரசாணை : 116 நாள் :
15.10.20 வெளிவந்துள்ளது.
அரசாணை : 37 , நாள் : 10.3.20 - ன் படி அரசு ஊழியர்களுக்கு முன் ஊதிய உயர் ( advance increments ) இனி வரும் காலங்களில் இல்லை என்பதாக இருந்தது சில கருவூலத்துறை அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியமும் ( Incentive ) இல்லை என்பதாக மறுத்த நிலையில் பலரும் அரசிடம் விளக்கம் கேட்டதற்கு அரசாணை : 116 , நாள் : 15.10.20 - ஐ வெளியிட்டு அரசாணை : 37 நாள் : 10.03.20 ஆனது தமிழக அரசின் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் பொருந்தும் என்று வழங்கியுள்ள தெளிவுரையின் மூலமாக ஆசிரியர்கள் படித்தால் மாணவர்கள் படிப்பார்கள் என்பதை மறுதலிப்பதாகவே உள்ளது.
இந்த பேரிடர் காலத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை வழங்க இயலாவிட்டாலும் , ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது. ஆகவே அரசாணைகள் : 37 , நாள் : 10.3.20 மற்றும் 116 , நாள் : 15.10.20 ஆகியனவற்றை திரும்பப் பெற்று ஊக்க ஊதியம் ( Incentive ) மற்றும் முன் ஊதிய உயர்வு ( Advance increments ) வழங்கிடுவதில் பழைய நடைமுறையையே தொடர்ந்திடுவதை உறுதி செய்திட வேண்டுகிறோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...