ஆடிட்டர் என்ற கணக்கு தணிக்கையாளர் பணிக்கு தகுதி பெற, சி.ஏ., தேர்வை, ஐ.சி.ஏ.ஐ., என்ற கணக்கு தணிக்கையாளர் அமைப்பு நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு தேதி, ஊரடங்கு காரணமாக பல முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தற்போது புதிய அட்டவணையை, ஐ.சி.ஏ.ஐ., அமைப்பு அறிவித்துள்ளது.அதன் விபரம்:
* புதிய முறையில் அடிப்படை படிப்பு தேர்வு, டிச., 8, 10, 12, 14ம் தேதிகளில் நடத்தப்படும். பழைய முறையில், நவ., 22, 24, 26, 28ம் தேதிகளில் முதல் தொகுப்புக்கும், டிச., 1, 3, 5ல் இரண்டாம் தொகுப்புக்கும் தேர்வு நடக்கும்
* இடைநிலை படிப்பில், புதிய முறைப்படி, நவ., 22, 24, 26, 28ம் தேதிகளில் முதல் தொகுப்புக்கும், டிச., 1, 3, 5, 7ம் தேதிகளில் இரண்டாம் தொகுப்புக்கும் தேர்வு நடக்கும்
* இறுதி தேர்வு, பழைய முறையில், நவ., 21, 23, 25, 27ம் தேதிகளில் முதல் தொகுப்புக்கும், நவ., 29, டிச., 2, 4, 6ம் தேதிகளில் இரண்டாம் தொகுப்புக்கும் தேர்வு நடக்கும். புதிய முறையில், நவ., 21, 23, 25, 27ல் முதல் தொகுப்பு மாணவர்களுக்கும், நவ., 29, டிச., 2, 4 மற்றும் 6ம் தேதிகளில் 2ம் தொகுப்புக்கும் தேர்வு நடக்க உள்ளன.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...