பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ''இந்த மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து சுகாதாரத் துறை, கல்வித் துறை, வருவாய்த் துறைகளுடன் ஆலோசனை நடத்தி முதல்வர் பழனிசாமிதான் முடிவு எடுப்பார்.
பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். தற்போது எந்த மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. புதுச்சேரியில் மட்டும் மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதுவும் செயல்படுமா என்று எனக்குத் தெரியாது. எல்லா மாநிலங்களிலும் பள்ளிகளைத் திறந்த பிறகு சில நாட்களில் மூடி இருக்கிறார்கள்.
8 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை உள்ளாட்சித் துறை உதவியுடன் தயார்படுத்தி வருகிறோம்'' என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...