பட்ஜெட் விலையில் புதிய ஆப்பிள் iPhone SE 2020 வாங்க ஆசையா? அதுவும் நம்ப முடியாத ரூ. 17,949 என்ற விலையில் வாங்கத் தயாரா? அப்படியானால், இது தான் உங்களுடைய அதிர்ஷ்ட நேரம். பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது எப்படி iPhone SE 2020 போனை வெறும் ரூ .17,949 க்கு வாங்கலாம் என்பதை
இந்த பதிவில் பார்க்கலாம்.
இதெப்படி சாத்தியம்.?மண்டைய குழப்பும் அசாத்தியமான மர்மங்கள்.!
iPhone SE 2020 வாங்க ஆசையா? பிக் பில்லியன் டேஸ் விற்பனை இன்று பிளிப்கார்ட்டின் பிரத்தியேக பிளஸ் உறுப்பினர்களுக்கு துவங்குகிறது. இந்த புதிய iPhone SE 2020 போனை வாங்க விரும்பும் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் இன்று முதல் இதை வாங்கலாம், பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினராக இல்லாத மற்ற பிளிப்கார்ட் பயனர்களுக்கு இந்த அதிர்ஷ்ட சலுகை நாளை முதல் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
iPhone SE 2020 போனிற்கு இத்தனை சலுகையா?
இந்த பிளிப்கார்ட் விற்பனையின் போது, iPhone SE 2020 போனின் அசல் விளையான ரூ .39,999 என்ற விலையிலிருந்து நேராக ரூ. 25,999 என்ற தள்ளுபடி விலையில் தற்பொழுது வாங்கக் கிடைக்கிறது. கூடுதலாக, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது வழங்கப்படும் கூடுதல் வங்கி சலுகைகள், எக்ஸ்சேஞ் சலுகைகளுடன் இந்த போன் தற்பொழுது எதிர்பார்த்திடாத பட்ஜெட் விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது. பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய தகவல்.! மார்ஸ் ரேடாரில் சிக்கியது இதுதான்.! iPhone SE 2020 போனை ரூ .17,749க்கு வாங்க இது அவசியம் இந்த வாய்ப்பை பெறுவதற்குக் கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்களைக் கவனமாகப் படியுங்கள். பிளிப்கார்ட் விற்பனையின் பிளாட் தள்ளுபடிக்கு மேல், நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) கிரெடிட் அட்டைக்கு கிடைக்கும் கூடுதல் சலுகையை பயன்படுத்தி, இத்துடன் எக்ஸ்சேஞ் சலுகையையும் சேர்த்துப் பயன்படுத்தினால் உங்களுக்கு iPhone SE 2020 வெறும் ரூ .17,749 என்ற விலைக்குக் கிடைக்கும். ‘
எக்ஸ்சேஞ் சலுகை இந்த சலுகையை பயன்படுத்தி புதிய iPhone SE 2020 போனை வெறும் ரூ.17,949 என்ற விலைக்கு வாங்கிய ஒரு பிளிப்கார்ட் பிளஸ் பயனர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த நபர் தன்னுடைய ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்து ரூ .6,300 பெற்றிருக்கிறார்.
கூடுதல் சலுகையுடன் நம்ப முடியாத விலை இத்துடன் கூடுதலாக ரூ .1,750 எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பெற்றிருக்கிறார். இதனால் இவருக்கு பிளாட் தள்ளுபடியில் மேல் கூடுதலாக ரூ .8,050 தள்ளுபடி செய்யப்பட்டு iPhone SE 2020 வெறும் ரூ .17,949 விலையில் கிடைத்துள்ளது.
சலுகை விபரம்
iPhone SE 2020 இன் பிளிப்கார்ட் பிளாட் தள்ளுபடி: ரூ .25,999 எக்ஸ்சேஞ் சலுகை (ரெட்மி குறிப்பு 7): ரூ 6300 (ரூ .100 பிக்கப் கட்டணம் உட்பட) எஸ்பிஐ கிரெடிட் கார்டு சலுகை: ரூ .1750 இறுதி சலுகை விலை: ரூ .17,949
முக்கிய குறிப்பு
பிளிப்கார்ட் விற்பனையில் இந்த ஐபோன் விற்பனைக்கு எஸ்பிஐ டெபிட் கார்டு வழியாக ரூ .1200 வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல், எஸ்பிஐ கிரெடிட் கார்டு வழியாக ரூ .1750 வரை தள்ளுபடி கிடைக்கிறது. iPhone SE 2020 வாங்க சரியான நேரம் இது தான். SBI பயனர்கள் போக, மற்ற வங்கி பயனர்களுக்கும் சலுகைகள் உள்ளது என்பதை மறக்கவேண்டாம். எக்ஸ்சேஜ் சலுகை ரூ .16,400 வரை வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...