Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SBI வீட்டுக்கே வந்து வாடிக்கையாளர்களுக்கு புதிதாக வழங்கும் சூப்பர் சேவை.. முழு விவரம்

 நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வாசலுக்கே வந்து வங்கி சேவைகளை வழங்குகிறது. பணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வீட்டு வாசல் விநியோக சேவைகளின் கீழ் வழங்குகிறது.

பணத்தை நீங்கள் தேடி போக வேண்டும். அது உங்கள் வீட்டு வாசலுக்கே வரும். இந்த சேவையை வீட்டு வாசலில் வங்கி வழங்கும் திட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கி வழங்குகிறது. இது தொடர்பாக எஸ்பிஐ ஒரு ட்வீட்டில் ."வங்கி உங்கள் வீட்டு வாசலுக்கு வர தயாராக இருக்கும்போது ஏன் வங்கிக்குச் செல்ல வேண்டும். உங்கள் டோர்ஸ்டெப் பேங்கிங் கோரிக்கையை இப்போதே பதிவுசெய்து, உங்கள் வீட்டின் வாசலிலிருந்து வங்கி சேவைகளைப் பெறுங்கள்" என்று தெரிவித்துள்ளது.

 வீட்டு வாசலில் வரும் சேவைகள் பாரத ஸ்டேட் வங்கி வீட்டு வாசலில் பிக்-அப் சேவைகள் (SBI door step pick-up services) என்னென்ன என்று இப்போது பார்ப்போம்.

 காசோலைகள் புதிய காசோலை கோரிக்கை சிலிப்புகள்

 லைஃப் சான்றிதழ் (ஜீவன் பிரமன்), இந்த சேவை அடுத்த மாதம் முதல் (1 நவம்பர் 2020)

 கிடைக்கும் பணம் டெபாசிட் செய்யலாம் பணம் போடலாம்

 பாரத ஸ்டேட் வங்கி வீட்டு வாசலில் வழங்கும் டெலிவரி சேவைகள் (SBI door step delivery services)

என்னென்ன என்று இப்போது பார்ப்போம். கால டெபாசிட் ரசீதுகள் கணக்கு அறிக்கை (Account statement)

வரைவுகள் /

படிவம் 16 சான்றிதழ்

ஏடிஎம்களுக்கே செல்லாமல் பணம் எடுக்கலாம் (Cash pick up)

டோர்ஸ்டெப் வங்கி சேவை கட்டணங்கள்

நிதி சேவைகள் என்று பார்த்தால் பணம் எடுக்க ரூ. 75 கட்டணம் + ஜிஎஸ்டி

பணம் செலுத்த / திரும்ப பெறுதலுக்கும் - ரூ 75 கட்டணம் + ஜிஎஸ்டி

காசோலை செலுத்த ரூ.75 கட்டணம் + ஜிஎஸ்டி

காசோலை புத்தக கோரிக்கை சீட்டு- ரூ.75 கட்டணம் + ஜிஎஸ்டி

 மடட + பணம் டொபசிட் செய்வது தொடர்பான ஆலோசனை மற்றும் கணக்கு அறிக்கை தொடர்பான ஆலோசனைகள் (சேமிப்பு வங்கி கணக்கு) –

இலவசம் கரண்ட் அக்கவுண்ட் கணக்கின் டூப்ளிகேட் ஸ்டேட்மெண்ட்டுக்கு (நகல்) ரூ. 100 / - + ஜிஎஸ்டி

பணம் எடுக்கலாம் வீட்டு வாசலில் வங்கி சேவையின் கீழ் பண பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள்: ஒரு நாளைக்கு பணம் டொபசிட் செய்ய ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது அதிகபட்சமாக 20 ஆயிரம் பணம் டெபாசிட் செய்யலாம். ஒரு பண பரிவர்த்தனை என்பது (போடுவதற்கு) குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் ஆக இருக்க வேண்டும். இதேபோல் ஒரு நாளைக்கு பணம் எடுப்பதும் ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது அதிகபட்சமாக 20 ஆயிரம் பணம் எடுக்கலாம் ஒரு பண பரிவர்த்தனை என்பது (எடுப்பதற்கு) குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் ஆக இருக்க வேண்டும்

எப்படி பெறுவது எஸ்பிஐ வீட்டு வாசலில் வங்கி சேவை எவ்வாறு செயல்படும்:

1) இந்த வீட்டு வாசல் விநியோக சேவையைப் பெற வேண்டிய எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டணமில்லா எண் 1800111103 அழைக்க வேண்டும்.

2) அழைப்பு இணைக்கப்பட்டவுடன், வாடிக்கையாளர் கடைசியாக 4 இலக்க சேமிப்பு வங்கி / நடப்பு கணக்கு எண்ணை வீட்டு வாசலில் வங்கி சேவை பதிவு செய்ய வேண்டும்

 3) ஆரம்ப சரிபார்ப்பிற்குப் பிறகு, அழைப்பு தொடர்பு மைய முகவருக்கு அனுப்பப்படும், அவர் இரண்டாவது / கூடுதல் சரிபார்ப்பிற்குப் பிறகு, கோரிக்கையை பதிவு செய்வார்.

4) வாடிக்கையாளர் கோரிக்கை விவரம் மற்றும் சேவை வழங்குவதற்கான விருப்பமான நேரம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ) வழங்கப்படும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive