NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றினை அதன் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது.

அதில் பொதுப்பணிகள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான சான்றிதழ் பதிவேற்றத்திற்குரிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பின் தகவல்கள் பின்வருமாறு

பணி: Assistant Director, Child Development Project Officer, Drugs Inspector & Junior Analyst

சான்றிதழ் பதிவேற்ற தேதி: 28.10.2020 – 06.11.2020

தமிழக அரசின் பொதுத்துறையில் சமூக நலன் மற்றும் சத்துணவு உணவு திட்டம் ஆகிய துறைகளில் காலியாக உள்ள உதவி இயக்குநர் மற்றும் குழந்தைகள் நல திட்ட அலுவலர் பணிகளுக்கான முதற்கட்ட சான்றிதழ் பதிவேற்ற பணிகளை வரும் 28.10.2020 முதல் 06.11.2020 அன்று மலை 5.30 மணி வரை அரசு வேலை நாள்களில் தங்களது மூலச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தமிழ்நாடு மருத்துவ சேவைகளில் காலியாக உள்ள மருந்து ஆய்வாளர் மற்றும் மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்தில் காலியாக உள்ள இளம் ஆய்வாளர் பணிகளுக்கு நான்காவது கட்ட சான்றிதழ் பதிவேற்ற பணிகளை 28.10.2020 முதல் 06.11.2020 அன்று மாலை 5.30 மணி வரையும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் தங்களின் சான்றிதழ்களினை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக ஸ்கேன் செய்து தேர்வாணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான தேர்வாணைய அறிவிப்பினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

 மேற்குறிப்பிட்ட நாள்களுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பத்தாரர்களுக்கு இந்த தெரிவில் கலந்துகொள்ள விருப்பமில்லை எனக் கருதி, அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்த குறிப்பாணை மற்றும் அரசு இ-சேவை மையங்களின் பட்டியல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive