NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொற்று பரவல் குறையாத 11 மாவட்டங்கள் , மற்ற மாவட்டங்கள்! -என்ன என்ன தளர்வுகள்? முழு விவரம்!

 .com/

*தமிழகத்தில் தளர்வுளற்ற முழு ஊரடங்கு வருகிற 7-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 *இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது நோய்த்தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளை அளிக்கலாமா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

*இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜூன் 14-ம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது

*கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கை தொடரவும், அதேபோல் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துவரும் மாவட்டங்களில் சில தளர்வுகளை அளிக்கவும் முடிவுசெய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

*இந்நிலையில் தமிழகத்தில் வரும் 14 -ம் தேதி வரை சில தளர்வுகளிடன் ஊடரங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

அதன் விவரங்கள்...

*இந்த புதிய ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

*தமிழ்நாட்டில் தற்போது நோய் பரவல் பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே இம்மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும், அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கும் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஏழாம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

*தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

*காய்கறி, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

*இறைச்சி கடைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

*அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

*சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 50 சதவீதம் மட்டும், டோக்கன் வழங்கி பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

*தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

*மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்கள் தவிர இதர மாவட்டங்களில் நோய் தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அளவுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.

*தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

*காய்கறி விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும்.

*இறைச்சி கடைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

*தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறையை பின்பற்றி செயல்படுத்த அனுமதிக்கப்படும்.

*அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

*சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீதம் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

*தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை அனுமதிக்கப்படும்.

*மின் பணியாளர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

*மின்பொருள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

*இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

*வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

*கல்வி, புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

*இருசக்கர வாகனம் விநியோகிக்கும் கடைகள் வாகன பழுதுபார்க்கும் பணிகளுக்கு மட்டும் அனுமதி

*வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும்.

பொது அறிவிப்புகள்


*நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியாளரிடம் இருந்து பெற்று பயணிக்கு அனுமதிக்கப்படும்.


*திருப்பூர்,சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காவும் மட்டும் மட்டும் 10 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.


*தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம் பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.


*பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்குமாறும், இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive