NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மறைந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு விண்ணப்பித்த ஒரு மாதத்தில் குடும்ப ஓய்வூதியம்: அனைத்து துறைத் தலைவர்களுக்கும் மத்திய அரசு உத்தரவு

மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஒய்வூதியமானது, அவர்கள் விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து துறைத்தலைவர்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால், மத்திய அரசு ஊழியர்கள் பலர் உயிரிழந்தனர். பல நேரங்களில், உயிரிழந்த ஊழியரை நம்பியே ஒட்டுமொத்த குடும்பமும் இருந்து வந்துள்ளது. இந்த நேரத்தில் வாழ்வாதாரத்துக்காக அந்த குடும்பங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது.

எனவே, உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியத்தையும் இதர சலுகைகளையும் விரைந்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம்
தேதிக்குப் பிறகு உயிரிழந்த அரசு
ஊழியர்களின் விவரம், அவர்களின்
குடும்பத்தினருக்கு ஓய்வூதியம்
வழங்கப்பட்ட நாள், தாமதம்
ஏற்பட்டால் அதற்குரிய காரணம்,
தாமதத்தை தவிர்க்க எடுக்கப்பட
வேண்டிய நடவடிக்கைள்
போன்றவற்றை அரசின் அனைத்து
துறைகளும் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive