NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மக்கள் நலன் கருதி மேலும் சில தளர்வுகள்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 31- 5-2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்நிலையில் , மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் , நோய்ப் பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத கோவை உள்ளிட்ட ஏழு மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை உள்ளிட்ட நான்கு டெல்டா மாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில் தளர்வுகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன . இதன் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு , மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து , தமிழ்நாட்டின் இதர 27 மாவட்டங்களில் 14-6-2021 முதல் , தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல் , மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது . பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும் பொது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்லுமாறும் , நெகிழிபைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை . மேலும் , பேக்கரிகள் , உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல , இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது . இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவை இயங்கலாம் . இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது . பொது மக்களின் நலன் கருதி , அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ - சேவை மையங்கள் 14-6-2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது . கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . ஆனால் , அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும் , வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு , கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது .
IMG_20210613_121642

IMG_20210613_121650

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9





1 Comments:

  1. ஆஹா என்ன அருமையான அரசின செயல்பாடுகள்,

    இந்த கள்ளச்சாராயத்தில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற, மற்றும் புதுவையிலிருந்து மது கடத்தப்படுவதை தடுக்க, அதிமுகவும் திமுகவும் சேர்ந்து 14 சாராய ஆலைகள் மற்றும் தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகள்,
    சாராயத்தின் மீதே ஏன் இவ்வளவு கரிசனம்,

    இதேபோல் மற்ற
    விஷயங்களும் இதே மாதிரி செயல்பட்டிருந்தால்,

    நம் தமிழகம் எங்கேயோ போயிருக்கும்,

    ஏன் முடியாதா என்ன....?

    இது ராஜாஜி, கக்கன், பக்தவச்சலம், காமராஜர், எம்ஜிஆர், நெடுஞ்செழியன், ஜானகி ராமச்சந்திரன், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா, காலத்திலிருந்து இதையே சொல்லப்பட்ட பழங்கதைதானே,

    இது எல்லோருக்கும் தெரியுமே....!!!

    (ஆக மொத்தத்தில் நம் தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் அனைவருக்கும் அனைத்துக்கும் அல்வா கொடுத்த செயல் இது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது).


    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive