NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash New : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு ( ஜூன் 14 வரை ) நீட்டிப்பு.

IMG_20210605_103059

மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி.தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் . இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 

* காய்கறி , பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . . மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு , ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும் . . இறைச்சிக் கூடங்கள் ( Slaughter ( houses ) ) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் . அனைத்து அரசு அலுவலகங்களும் , 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 

• சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு , பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் .

 * தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

 மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு , ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன்

கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும் . . தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் , இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 

* காய்கறி , பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 

* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு , ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும் . - இறைச்சிக் கூடங்கள் ( Slaughter houses ) ) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் . 

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் . 

* அனைத்து அரசு அலுவலகங்களும் , 30 சதவிகிதம் • அனைத்து அரசு அலுவலகங்களும் , 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் , 

* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு , பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் . 

• தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் , வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் ( Housekeeping ) இ - பதிவுடன் அனுமதிக்கப்படும் . . மின் பணியாளர் ( Electricians ) பிளம்பர்கள் ( Plumbers ) ( கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் ( Motor Technicians ) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ - பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர் . 

* மின் பொருட்கள் ( electrical goods ) , பல்புகள் , கேபிள்கள் , ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் - 7/10 கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 

* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் ( விற்பனை நிலையங்கள் அல்ல ) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 

* ஹார்டுவேர் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . . வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்டும் .

. கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்

வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் ( விற்பனை நிலையங்கள் அல்ல ) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் .

வாடகை வாகனங்கள் , டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ - பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும் . மேலும் , வாடகை டேக்ஸிகளில் , ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் , ஆட்டோக்களில் , ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும் . பொது . நீலகிரி மாவட்டம் , கொடக்கானல் , ஏற்காடு . ஏலகிரி , குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ - பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் .

• கோயம்புத்தூர் . திருப்பூர் , சேலம் , கரூர் , ஈரோடு , நாமக்கல் , திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் , ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் , ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின் , ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும் , மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் , 10 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் . 

* தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி , பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம் , பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் , இது தொடர்ந்து செயல்படுத்தப்படும் . 

• பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும் . இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் . கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த , பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் , பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் . 

 மேலும் , கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி , பொது இடங்களில் முகக் கவசம் அணிவது , சமூக இடைவெளியினை கடைபிடிப்பது , கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும் , நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் , பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.





1 Comments:

  1. இந்த முறை ஊரடங்கு அறிவிப்பு சமச்சீராக உள்ளது,
    மிக்க நன்றி.
    மேலும் விமானம், ரயில், மாவட்டம் பஸ், போக்குவரத்தை அனுமதித்தால் , அங்கிருந்து வருபவர்கள் தான் அதிக பிரச்சினையும் உருவாகும் வாய்ப்புள்ளது. இதைத்தவிர பெண்களுக்கு இலவசம் பஸ் பயணம் என்பதால் கரோனா மேலும் பரவ வாய்ப்புள்ளது,

    மாறாக ஊனமுற்றோர், முதியோர், இவர்களுக்கு மட்டும் இலவச பஸ் பயணம் கொடுக்கலாமே, இவர்களால் எந்த பிரச்சனை வரப் போவது இல்லையே பெண்களுக்கு இலவசமாக கூட்டம் அலைமோதும் முண்டியடித்துக்கொண்டு இதனால் மற்றவர்களுக்கும் பிரச்சனை ஏற்படும் மேலும் இதற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் (ஜந்து வருடத்திற்கு ) வேற வழிகளில் பயன்படுத்தலாமே ...!

    எது எப்படி இருப்பினும் இந்த சமச்சீரான ஊரடங்கு அனைவருக்கும் பயன்படும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive