ரூ.150 கோடி மதிப்பிலான கணினி பாட புத்தகங்கள் குப்பைக்கூலமாய் அரசு கிடங்கில்

ரூ.150 கோடி மதிப்பிலான கணினி பாடப்புத்தகங்கள் குப்பைக்கூலமாய் அரசு கிடங்கில் உள்ளதாக கணினி ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக மாநில பொதுச்செயலாளர் குமரேசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது. அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய அரசு மாணவர்களுக்கு கணினி கல்வி தந்தவர் கலைஞர்.

கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து மேல்நிலைப்பள்ளிகளில் 1998ம் ஆண்டு கொண்டு வந்தார். அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

தனியார் பள்ளி மாணவர்கள் கற்றுக்கொண்டிருந்த கணினி அறிவியல் கல்வியை அரசு பள்ளிகளிலும் கற்றுத்தரப்பட்டது. 2011-12ம் ஆண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு ரூ.150 கோடியில் அச்சடிக்கப்பட்ட கணினி பாடப்புத்தகம் இன்று வரை வழங்கப்படாமல் ஆட்சி மாற்றம் காரணமாக அரசு கிடங்குகளில் குப்பையாக உறங்கிக்கொண்டிருக்கிறது. அதே போல 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருந்தோம். ஆனால் அதிமுக ஆட்சியில் பகுதி நேர ஆசிரியர் பணியிடம் கூட வழங்கப்படவில்லை. நமது சமச்சீர் கல்வி முறையை பின்பற்றி கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஒன்றாம் வகுப்பில் இருந்து கணினி அறிவியல் பாடத்திட்டம் அமுலாக்கப்பட்டு வருகின்றன.

கணினி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யப்படுகின்றன. இன்றைக்ககு கணினி அறிவியலை கற்பிக்கும் முதல் மாநிலமாக கேரளா விளங்குகிறது. ஒன்றிய பாஜக அரசு கடந்த 2011ம் ஆண்டு அரசு பள்ளிகளில் கணினி கல்வி வழங்குவதற்காக கணினி ஆய்வகம் அமைக்க ரூ.900 கோடி ஒதுக்கி பயன்படுத்தாமல் 8 ஆண்டுகள் கழித்து ஒன்றிய அரசுக்கே திருப்பி உள்ளது. மாண்புமிகு மா.பா. பாண்டியராஜன் கல்வித்துறை அமைச்சராக இருந்த போது அந்த நிதியை மீண்டும் பெற்றுத் தந்த பிறகும் 2 ஆண்டுகள் பயன்படுத்தாமல் 2019ம் ஆண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ளது.

கணினி அறிவியல் பாடம் தனி பாடமாக இல்லாமல் புதிய பாடத்திட்டத்தில் 3 பக்கம் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகஎட்டு அமைச்சர்கள் மாறி மாறி வந்தாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி பாடத்திட்டம் சென்றடையவில்லை 2011ம் ஆண்டு 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை அதிமுக அரசு நியமித்தது. அதிலும் குளறுபடிகள் நிறைந்துள்ளன. கிட்டத்தட்ட 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென குமரேசன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive