மே 10 முதல் விண்ணப்பித்த 3 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரமின்றி அவற்றை பெற்றுக்கொள்ளலாம். ஜூன் 15-ம் தேதி முதல் இந்த மாத இறுதிவரை அவற்றை பெற்றுக்கொள்ளலாம். அவற்றை பெறும்போது ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. மேலும் புதிதாக ரேஷன் அட்டை பதிவு செய்தவர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கொரோனா நிவாண தொகை மற்றும் மளிகை பொருட்களை பெற்றும் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ளலாம் என கால அவகாசம் நீட்டித்து அரசு கூறியுள்ளது.
Latest Updates
10th, 11th, 12th Questions & Answers
Important Links!
Home »
Padasalai Today News
» தமிழகத்தில் கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
கொரோனா நிவாரணத் தொகையை
பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள தமிழ்நாடு அரசு
அறிவுறுத்தியுள்ளது. ஜூலை 31க்குள் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட்
1ம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய குடும்ப அட்டைதாரர்களும் ஆகஸ்ட் முதல்
வாரத்தில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு
அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நிவாரண உதவி வழங்கும் பொருட்டு தமிழக அரசு 4 ஆயிரம் ரூபாயை மே 2021 மற்றும்
ஜீன் 2021 ஆகிய மாதங்களில் இரண்டு தவணைகளாக 2 ஆயிரம் ரூபாய் வீதம்
வழங்கியது. கொரோனா பாதிப்பு நிவாரண தொகையின் 2-வது தவணை தொகையான ரூ.2
ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...