வயது அதிகரிக்க அதிகரிக்க உடல் நல பாதிப்புகள் வரிசை கட்டி வர ஆரம்பித்து விடுகின்றன. இளம் வயதில் நாம் உட்கொண்ட உணவே முதுமையிலும் சாப்பிடுவது என்பது இயலாத காரியம். இளம் வயதில் செரிமானம் அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு செரிமானத் திறன், ஊட்டச்சத்து கிரகிக்கும் திறன் குறைய ஆரம்பிக்கும். அதனால் 20ல் சாப்பிட்ட உணவை 40ல் சாப்பிட முடியாது. 40ஐக் கடந்தவர்கள் ஆரோக்கியமாக இருக்க எடுக்க வேண்டிய உணவுகள் பற்றி பார்ப்போம்!
தினமும் ஒரு கப் அளவுக்கு சுண்டல் எனப்படும் மூக் கடலையை எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்குத் தேவையான ஆற்றல், புரத சத்தை தந்து உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்கிறது.
வீட்டில் எளிதாக செய்யக் கூடிய உணவு இது.
வாரத்துக்கு 2 – 3 முறையாவது கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் அரை கீரை, ஒரு நாள் சிறுகீரை, ஒரு நாள் முருங்கைக் கீரை என்று விதவிதமான கீரைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது இடுப்பு, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். இரும்புச்சத்து, வைட்டமின் இ என உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்தும் இதில் இருந்து கிடைத்துவிடும்.
முடிந்தால் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடலாம். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டாம் என்று சொல்வார்கள். இது இதயத்தின் ஆரோக்கியத்தை காக்க உதவும். இதய ரத்த நாள அடைப்பு நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
ஒரு கப் அளவுக்கு பூசனி விதையை சாப்பிடுவது பாதாமைக் காட்டிலும் பாதி அளவு கலோரி தான் கிடைக்கும். ஆனால், அதை விட அதிக ஊட்டச்சத்து, நார்ச்சத்து நமக்கு கிடைத்துவிடும். இதனுடன் இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீஷியம், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் துத்தநாகம் போன்ற ஊட்டச் சத்துக்களும் கிடைத்து விடும்.
இஞ்சி நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் செரிமானத்தை சீராக்கும் மருந்தாகும். வாரத்துக்கு ஒரு முறையாவது இஞ்சியை மருந்தாக, கஷாயமாக செய்து சாப்பிடும்போது வயிறு, செரிமான பிரச்னைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
மிளகு, மஞ்சள் போன்றவையும் உடலை காக்கும் அருமருந்தாகும். மிளகில் உள்ள பெப்ரின் என்ற ரசாயனம் செரிமான மண்டலம் மற்றும் உடலில் ஏற்படக் கூடிய இன்ஃபிளமேஷனை போக்கும். அதே போல மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற ரசாயனம், புற்றுநோய் உள்ளிட்ட உயிரைப் பறிக்கும் பல்வேறு பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...