
போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான சமூக விழப்புணர்வு வலுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன . அதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்துவகை பள்ளிகளிலும் , 6 முதல் 12 வகுப்பு பயின்றுவரும் மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்தல் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட போதை எதிர்ப்பு மன்றங்கள் ( Anti - Drug Clubs ) அமைக்கப்பட்டுள்ளன . பார்வை ( 1 ) ல் காணும் அரசாணையில் போதை எதிர்ப்பு மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது . அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு போதை எதிர்ப்பு மன்றச் செயல்பாடுகளை 2025-26 ஆம் கல்வி ஆண்டில் செயல்படுத்திய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஆணை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Anti drug circular signed copy 03.06.2025 - Download here







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...