Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாட்டில் முதுகலை பட்டப்படிப்பு 2025 : அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பம் தொடக்கம்!

 IMG-20250622-WA0008 

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுகலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் (TNGASA PG 2025) தொடங்கப்பட்டுள்ளது. 

2025-26 கல்வி ஆண்டில் 110 அரசு கல்லூரிகளில் வழங்கப்படும் முதுகலை படிப்பில் சேர விரும்புகிறவர்கள் இணையதளம் வழியாக ஜூலை 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்தாண்டு மொத்தம் 24,309 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு விரும்பமுள்ள மாணவர்களை சேர்க்கும் வகையில், ஒருங்கிணைந்த இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் கலந்தாய்வின் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டில் அரசு கல்லூரிகளில் சேர விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம். முதுகலை படிப்புகள் வழங்கும் அரசு கல்லூரிகளில் 7 கல்லூரிகள் சென்னையில் உள்ளன.

விண்ணப்பதார்கள் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, அந்தந்த கல்லூரி/பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்த் தகுதியைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதிகள் இல்லாத விண்ணப்பங்கள்ள் கல்லூரிகளின் மூலம் நிராகரிக்கப்படும். 

சென்னையில் உள்ள அரசு கல்லூரிகள்

மாநில கல்லூரி

ராணி மேரி கல்லூரி

பாரதி பெண்கள் கல்லூரி

நந்தனம் அரசு கலை கல்லூரி

டாக்டர். அம்பேத்கர் அரசு கலை கல்லூரி

ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

காயித்-இ-மில்லத் அரசு பெண்கள் கல்லூரி

கல்லூரிகளில் வழங்கப்படும் முதுகலை படிப்புகள் குறித்த விவரங்களை அந்தந்த கல்லூரியின் இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம். 


முதுகலை படிப்பு தகுதிகள் 


கலை மற்றும் அறிவியல் பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் முதுகலை படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். 


விண்ணப்பிப்பது எப்படி?


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tngasa.in/ அல்லது https://pg.tngasa.in/ என்ற இணையதளங்களின் வழியாக விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் முதலில் பதிவு செய்து பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின்போது விரும்பப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.2 செலுத்த வேண்டும். 


மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது மொபைல் எண், இமெயில் முகவரி மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு அனைத்து செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ்கள் தேவை. இணையத வசதி இல்லாதவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள Admission Facilitation Center மூலம் விண்ணப்பிக்கலாம். 


மாணவர்களின் தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு, கல்லூரி அளவிலான கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். 


விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில், ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 18-ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் பட, பாதுகாப்புப் படைவீரர்கள் ஆகியவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி நடைபெறும். பொது கலந்தாய்வு ஜூலை 28 முதல் தொடங்கி நடைபெறும். 


முக்கிய நாட்கள்:


விண்ணப்பம் தொடக்கம் 20.06.2025


விண்ணப்பிக்க கடைசி நாள் 15.07.2025


தரவரிசை பட்டியல் 18.07.2025


சிறப்பு கலந்தாய்வு 25.07.2025 


முதல்

பொது கலந்தாய்வு 28.07.2025


கல்லூரி திறப்பு 04.08.2025


ஆகஸ்ட் 4 முதல் வகுப்புகள் 

கலந்தாய்வின் மூலம் மாணவர்கள் சேர்க்கை அந்தந்த கல்லூரிகளின் வழியாக நடைபெற்று, ஆகஸ்ட் 4-ம் தேதி முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive