சென்னை:
அரசு பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்கக நிதியில், 50 சதவீதம் விடுவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு, 2025 - 26ம் கல்வியாண்டுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தொடர் செலவினத்துக்கான மானியத்தை பரிந்துரைத்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கும் வகையில், மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீட்டை குறிப்பிட்டு, 58.86 கோடி ரூபாயை, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்ககம் விடுவித்துள்ளது.
இந்த நிதியை, பள்ளி மேலாண்மை குழுக்களின் வங்கிக் கணக்கிற்கு, மூன்று நாட்களுக்குள் மாற்றும்படி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிதியை, பள்ளிகளின் உள்கட்டமைப்பு, குடிநீர் வசதிகள், கழிப்பறை, சுற்றுச்சுவர், மின் கட்டணம், இணையம், ஆய்வகம், கற்றல், கற்பித்தல் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்க பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...