NEET Online Coaching

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜிப்லி படங்களுடன் கல்வித்துறை நாட்காட்டி

  


 புகைப்படத்தை, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் நொடிப்பொழுதில் அனிமேஷன் படங்களாக மாற்றுவது தற்போது டிரெண்ட் ஆகி உள்ளது. இதை, ஜிப்லி படங்கள் என்று அழைக்கின்றனர். பள்ளி கல்வித்துறை காலண்டரில், ஜிப்லி படங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.

நடப்பு, 2025 - 2026ம் கல்வியாண்டு, ஜூன், 2ல் துவங்கியது. பள்ளிகள், 210 நாட்கள் செயல்படும், எந்த மாதம் எந்த தேர்வு, எவ்வளவு விடுமுறை நாட்கள் என்ற விபரம் இதில் இடம் பெற்றுள்ளது.

அடுத்தாண்டு ஏப்ரல், 24ம் தேதியுடன், 2026ம் கல்வியாண்டு நிறைவு பெறுகிறது. வழக்கமாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் காலண்டர் போலன்றி இம்முறை ஜிப்லி படங்கள் நிரம்பியதாக நாட்காட்டி அமைந்துள்ளது.

சீருடையுடன் பள்ளி மாணவ, மாணவியர், குழந்தைகள், சறுக்கல் விளையாட்டில் மாணவர்கள், மாணவியர் படிக்கும் காட்சி; ஆசிரியை மாணவருக்கு பாடம் கற்றுத்தருவது; பள்ளியில் மரம் நடும் மாணவி;புத்தகங்களுடன் மாணவியர், நவ., மாதம் பருவத்தேர்வு விடுமுறையை கொண்டாட மாணவர்கள் விளையாடுவது போல், 2026 ஜனவரி மாதம், பொங்கல் நாளை உணர்த்த நெற்கதிர், அரிவாள் சகிதமாக விவசாயிகள், தண்ணீர் தினத்தை குறிக்கும் வகையில்படம்; விளையாட்டு பாடவேளையில் குஷியாகபேசி மகிழும் மாணவர்கள்; ஆய்வகத்தில் உன்னிப்பாக பாடம் கற்கும் மாணவியர்; பாடங்களுக்கு இடையே குறிப்பெடுத்தும் கற்கும் மாணவர் உள்ளிட்ட காட்சிகள் ஜிப்லி படங்களாக இடம் பெற்றுள்ளன.

இவை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கவரும் வகையில் உள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

72 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

72 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive