அதில், மார்ச் 1ஆம் திகதி முதல் ஜூன் 17ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, KG வகுப்புகளில் சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரும் ஆங்கில வழிக்கல்வியில் சுமார் 52 ஆயிரம் பேரும் இணைந்துள்ளனர்.
2ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 65 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
ஆகமொத்தம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 8ஆம் வகுப்பு வரை 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
அந்தவகையில், இதில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் சுமார் 18,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மேலும், தமிழகத்திலேயே குறைவாக நீலகிரி மாவட்டத்தில் சுமார் 1300 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...