பார்வையிற்காண் கடிதத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் 10.06.2025 அன்று தலைமைச்செயலகத்தில் நிதித்துறை முதன்மைச்செயலர் அவர்களால் நடைப்பெறவுள்ள ஆய்வு கூட்டத்தின் பொருட்டு GPF DCRG CPS ஓய்வூதிய நிலுவை இனங்களைவிரைவில் முடிக்கும் வகையில் 07.06.2025 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் கல்வி மாவட்டம் அளவில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு ஆய்வுக்கூட்டம் ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் நிலுவையில் உள்ள அனைத்து DDO- க்களுக்கு ( தலைமயாசிரியர் ) ஆய்வு கூட்டம் நடத்திடவும் , முதன்மை கல்வி அலுவலர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தியும் ஏப்ரல் 2024 முதல் மே 2025 வரை ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்ளுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் ( GPF ) . பணிக்கொடைத்தொகை ( DCRG ) மற்றும் பங்களிப்பு ஓய்வூதியம் ( CPS ) ஆகியவற்றினை தற்போதைய நிலையினை இணைப்பிலுள்ள EXCEL படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆர் பிரிவு மின்னஞ்சலிற்கு அன்று மாலைக்குள் உரிய விவரங்களை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்தும் பட்டியலை தொகுத்து சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பிட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அறிவுரைகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...