
திருப்பூர் மாவட்டத்தில் 965 அரசு தொடக்கப் பள்ளிகள், 264 நடுநிலைப் பள்ளிகள், 89 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 95 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,413 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 633 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதுதவிர மேல்நிலை வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பெற்றோர் கூறியது: திருப்பூர் மாநகரில் கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளி, குமார் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக வரும் மாணவ, மாணவிகளையும், பெற்றோரையும் அலைக்கழிக்கின்றனர். மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துவிட்டதாகவும், உங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்குமாறும் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்துகிறது.
9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களில் மாணவர்களை சேர்க்க முடியாத நிலையுள்ளது. இதனால் மாணவர்கள், பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு கடிதம் வாயிலாக புகார் அனுப்பி உள்ளோம் என்றனர்.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, “திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) காளிமுத்து தலைமையில் பள்ளி துணை ஆய்வாளர்கள் ரவி, ராஜசேகர், கலைமணி ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். எந்த மாணவரையும் திருப்பி அனுப்பாமல், அனைவரையும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையின்போது, பெற்றோரிடம் நன்கொடை எதுவும் பெறக்கூடாது. பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் செலுத்திய கட்டணத்துக்கு, கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். மதிப்பெண் குறைவாக இருப்பதை காரணம் காட்டி, அரசுப்பள்ளிகளே மாணவர்களை வெளியேற்றினால், அவர்கள் படிக்க முடியாமல், பாதை மாற வாய்ப்புகள் உள்ளன. எனவே, குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகளை அரசுப் பள்ளிகள் உருவாக்கித் தர வேண்டும் என அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) காளிமுத்து அறிவுறுத்தியுள்ளார்” என்றனர்.
என்ன செய்தி போட்டு இருக்கீங்க ஒரு வகுப்பு அறைக்கு 40 மாணவர்கள் சரி 60 மாணவர்கள் வரை வைத்து கிட்டு வகுப்பறையில் இடம் இல்லை toilet facility இல்லை teacher இல்லை. ஆனா சேர்த்துக்கிட்டே இருக்கணும். அப்புறம் result வரவில்லை என்றால் அரசு பள்ளி தரம் இல்லை. 40 பேருக்கு மேலே செல்லும் போது வகுப்பறை கண்ட்ரோல் போகுது. மாணவர்கள் அனைவரும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் வகுப்பறை ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
ReplyDeleteஉண்மை
Deleteதனியார் பள்ளிகளில் படித்து பீஸ் கட்ட முடியாமல் அல்லது குறைந்த மதிப்பெண் பெற்று வெளியேற்ற மற்றும் வெளியேறும் சூழ்நிலையில் உள்ள மாணவர்கள் மாற்று சான்றிதழ் பெறாமல் பத்தாம் வகுப்பில் சேர்க்க கட்டாய படுத்தும் போது முடியாது என்று தான் சொல்கிறோம். . தேர்ச்சி பெற்றார் களா என்று கூட தெரியாமல் எப்படி சேர்ப்பது.
ReplyDelete