தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரி, அரசு கல்லூரி, அரசு நிதியுதவி பெறும் கல்லூரி, தனியார் சுயநிதி கல்லூரி ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், 29-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 2 லட்சத்து 90 ஆயிரத்து 678 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என்பதால் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பித்து 9-ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...