
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் மாயவன் அவர்களுடைய ஆசிரியர் விரோத, இயக்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து அச்சங்கத்திலிருந்து விலகி பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரூர் மலைக்கொழுந்தன் தலைமையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் என்கிற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்கள் கல்வித்துறையில் பல ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளால் உலகத்துக்கே எடுத்துக்காட்டாகவும், இந்தியாவிலேயே முதன்மையாகவும் விளங்கும் திராவிட மாடல் அரசை பொய்யாக விமர்சித்து பாசிச சக்திகளுக்கு ஆதரவாக செயல்படும் அவரது நிலைப்பாட்டை எதிர்த்தும் , ஒரு நடிகரின் பின்னால் சென்றுஆசிரியர்களின் மாண்பை அடகு வைப்பதை எதிர்த்தும்திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...