இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது.
தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. இதனால், பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவித்தபடி மே 8-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியீடு சற்று தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து, தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, “பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.எனினும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இதனால், திட்டமிட்டபடி மே 8-ல் பிளஸ் 2 முடிவுகளை வெளியிட முடியாது. புதிய அரசு அமைந்ததும், உரிய ஒப்புதல் பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...