Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவப் படிப்புக்கான நீட் மறுதேர்வு: தேர்வு மைய நகரத்தை மாற்ற வாய்ப்பு

hindutamil-prod%2F2026-05-02%2F7g9litnb%2F2121551212 
நீட் மறுதேர்வு எழுதவுள்ள மாணவர்​கள் தங்​கள் தேர்வு மைய நகரத்தை மே 12-க்​குள் மாற்​றிக் கொள்​ளலாம் என்​று என்​டிஏ தெரி​வித்​துள்​ளது.
 

நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​கள் மற்​றும் சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி படிப்​பு​கள் மற்​றும் கால்​நடை மருத்​து​வப் படிப்​பின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​களுக்கு தேசிய தகுதி மற்​றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்​தப்​படு​கிறது.

நீட் தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்தி வரு​கிறது. அதன்​படி, 2026-27-ம் கல்​வி​யாண்​டுக்​கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நேரடி முறை​யில் நடை​பெற்​றது. இந்த தேர்வை நாடு முழு​வதும் சுமார் 26 லட்​சம் மாணவர்​கள் எழு​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, நீட் தேர்வு வினாத்​தாள் கசிந்​தது கண்​டறியப்​பட்​ட​தால் தேர்வை என்​டிஏ ரத்து செய்​தது. மேலும், முறை​கேடு தொடர்​பாக சிபிஐ விசா​ரணை நடத்தி வரு​கிறது. நீட் மறு​தேர்வு ஜூன் 21-ல் நடத்​தப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்​கள் தங்​கள் தேர்வு மைய நகரத்தை மாற்​றிக் கொள்ள என்​டிஏ தற்​போது வாய்ப்பு வழங்​கி​யுள்​ளது. இதையடுத்​து, விருப்​ப​முள்​ளவர்​கள் neet.nta.nic.in எனும் வலைத்​தளத்​தில் சென்று மே 25-ம் தேதிக்​குள் நகரங்​களை மாற்​றிக் கொள்​ளலாம். கூடு​தல் விவரங்​களை /nta.ac.in/ என்ற வலைத்​தளத்​தில் அறிய​லாம் என்று என்​டிஏ தகவல் தெரி​வித்​துள்​ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive