Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th Public Exam Result 2026 - Direct Link Download

 

 

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -6.
மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மார்ச் 2026
தேர்வு முடிவுகள் வெளியீடு!
செய்திக்குறிப்பு


மார்ச் 2026-ல் நடைபெற்ற 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலைப் பொதுத்தேர்வு முடிவுகள் 08.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு SIEMAT Hall, SCERT, DPI வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

வகுப்பு,  மேல்நிலைப் பொதுத் தேர்வு,  தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம் 08.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு இணையதள முகவரி!


https://www.tnresults.nic.in/

 

  


https://www.dge.tn.gov.in/

 

 

https://results.digilocker.gov.in/ 


தேர்வர்கள் மேற்காண் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணாக்கர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். எண்ணிற்கும் Whatsapp செயலி வழியாகவும் தேர்வர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் "Hi" எனப் பதிவிட்டு பின்னர் வரும் செய்தியில் துறையின் பெயர் மற்றும் தேர்வர்களின் வகுப்பினை தெரிவு செய்தால் தொடர்வரும் பதில் செய்தியில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து அனுப்பினால், தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே Whatsapp செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம். இந்த ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் Whatsapp செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.


மாணவர்கள் நம்பிக்கையுடனும் தங்களது தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுமாறு தைரியத்துடனும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் ஒருவரின் வாழ்க்கை, திறமை அல்லது தன்மதிப்பை நிர்ணயிப்பவை அல்ல. தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றாலும் நம்பிக்கையை இழக்கவோ, தமக்குத் தாமே தீங்கு விளைவிக்கவோ அல்லது எவ்வித தீவிரமான முடிவுகளையும் எடுக்கவோ கூடாது.

ஒவ்வொரு மாணவரும் வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் முன்னேறி வெற்றி பெறும் திறன் கொண்டவர்கள்; மேலும் எதிர்காலத்தில் பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு ஆதரவாக பள்ளிகள் மூலம் சிறப்பு பயிற்சியும் வழங்கப்படும்.


இக்காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நிற்குமாறு பொறுமையுடனும் அக்கறையுடனும் புரிதலுடனும் துணை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தேவையின் அடிப்படையில் வழிகாட்டுதல், ஊக்குவித்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்கி, அவர்கள் நேர்மறை எண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனை உதவி
6 : 14417/104/14416.

அரசுத் தேர்வுகள் இயக்குநர்
இடம்: சென்னை-6
நாள்: 07.05.2026. 

 

 


 

 

 

 

 

 

 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive