Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்களின் பெயர் எழுதும் முறை - RTI தகவல்

 
வருகைப் பதிவேட்டில்  ஆசிரியர்களின் பெயர் எழுதும் முறை - தகவல் அறியும் உரிமைச்  சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்

 மூத்தோர், இளையோர் - வருகைப் பதிவேட்டில் முதலில் யார் பெயர் எழுத வேண்டும்? மற்றும் தலைமை பொறுப்பு எந்த ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும் - RTI தகவல்

Seniors vs. Juniors: Whose name should be entered first in the attendance register? And to which teacher should the incharge responsibility be assigned? — RTI Information.


தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005

பொது நகவல் வழங்கும் அலுவலர்

வட்டாரக் கல்வி அலுவலகம், குருவிகுளம் 

ந.க.எண்.747/அ2/2018, நாள்.30-08-2018


பொருள்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005-மனுதாரர் திரு. க.நடராஜன் என்பாருக்கு உரிய தகவல் அளித்தல் - சார்பு

பார்வை-

1. திருநெல்வேலி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் அவர்களின் சுடித எண்.5283/ஆ3/2017, நாள்.-11-12-2017.

2 குருவிகுளம் சரகம், பழங்கோட்டை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் திரு. சு. நடராஜன் என்பாரது மனு. நாள்.06-12-2017.

பார்வை காணும் கடிதத்தின் ஆணைக்கிணங்க மற்றும் பார்வை(2)ல் காணும் மனுதாரரின் மனுவினை ஆய்வு செய்து தகவல் உரிமைச் சட்டம் பிரிவு6(3)ன் கீழ் மனுதாரருக்கு கீழ்கண்டவாறு தகவல் அளிக்கப்படுகிறது.

பார்வை(2)ல் காணும் மனுவின் படி திரு. சந்திரசேகரன் என்பார் 15-10-2010 ல் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, திருமதி. து.சுப்புரத்தினம் என்பார் 23-07-2012 ல் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி, நிகழ்வில் பட்டதாரி ஆசிரியரான திரு. ஷ. சந்திரசேகரன் என்பாரை விட ஆங்கில பட்டதாரி ஆசிரியையான திருமதி. து.சுப்புரத்தினம் என்பார் இளையவரே ஆவார்.


மனுதாரரின் கேள்வி & கேள்விக்கான விளக்கம்

1. ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் இருவரில் யாருடைய பெயர் முதலில் எழுதப்பட வேண்டும்

பட்டதாரி ஆசிரியர் பணி நிலையில் மூத்தோரின் பெயரே முதலில் எழுதப்பட வேண்டும்

2. தலைமை ஆசிரியர் விடுப்பு எடுத்தால் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்

மூத்தோருக்கே முதலில் இவ் பொறுப்பினை பெறும் உரிமை உண்டு.


வட்டாரக் கல்வி அலுவலகம்

குருவிகுளம்


பெறுநர்

திரு.சு.நடராஜன்,

தலைமை ஆசிரியர்,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

பழங்கோட்டை,

குருவிகுளம் சரகம்.


நகல்.

மாவட்டக் கல்வி அலுவலர்,

மாவட்டக் கல்வி அலுவலகம்,

சங்கரன்கோவில் - தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive