OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் 9,646 கெளரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.35,000/- ஆக உயர்த்தி உத்தரவு

 

அரசுக் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றும் 9,646 கெளரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ.35,000/- ஆக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவு

அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணியாற்றும் 9,646 கவுரவப் பணியாளர்களுக்கு மாதாந்திரத் தொகுப்பூதியத்தை ரூ.5,000 உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு எண்: 1051 , நாள்: 13.11.2026

செய்தி வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் 9,646 கௌரவ விரிவுரையாளர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியம் நவம்பர்-2026 முதல் ரூ.5,000/- உயர்த்தி வழங்கப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியத்தை 01.11.2026 முதல் ரூ.5,000/- உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மாணாக்கர்களின் கல்விச்சேவையைப் பாதிக்காத வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் தொய்வின்றித் தொடர தங்களின் பங்களிப்பினை வழங்கிவரும் கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்துவரும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியத்தை ரூ.30,000/-லிருந்து

ரூ.35,000/- ஆகவும், அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியத்தை ரூ.25,000/-லிருந்து ரூ.30,000/- ஆகவும் 01.11.2026 முதல் உயர்த்தப்படுகிறது.

இதன் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்

தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் 8,741 கெளரவ விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணிபுரிந்துவரும் 319 கௌரவ விரிவுரையாளர்கள், அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் 586 கௌரவ விரிவுரையாளர்கள் என மொத்தம் 9,646 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் பயனடைவர். இதனால் இந்நிதியாண்டில் அரசுக்கு ரூ.24.12 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive