OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

TN Schools Free Uniform Scheme 2026-27: விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் - சத்துணவு உண்ணும் மாணவர்கள் விவரங்களை EMIS தளத்தில் இன்றே பதிவேற்றத் தொடக்கக் கல்வி இயக்குநர் அவசர ஆணை

 TN Schools Free Uniform Scheme 2026-27: விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் - சத்துணவு உண்ணும் மாணவர்கள் விவரங்களை EMIS தளத்தில் இன்றே பதிவேற்றத் தொடக்கக் கல்வி இயக்குநர் அவசர ஆணை
 
 தவறினால் HM, BEO, DEO முழுப் பொறுப்பு

தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.

ந.க.எண். 1593880 / கே 2/2025, நாள். 13.11.2026.

பொருள்

தொடக்கக் கல்வி - விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான 1ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதியதாக சேர்ந்த மாணவ/மாணவிகளுக்கு முதற் கட்டமாக அளவெடுத்து EMIS portal இல் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டது இறுதி தேவைப்பட்டியல் வழங்கிட கோரியது சத்துணவு உண்ணும் மாணவ/மாணவிகள் விவரங்களை EMIS portal-ல் உள்ளீடு செய்ய அறிவுறுத்துதல்-தொடர்பாக.

பார்வை:

1. சென்னை-5, சமூக நல இயக்குநரின் கடிதம் ந.க.எண்:1577426/சி.தி-3/2025, நாள். 30.10.2026.

2. இவ்வியக்கக மின்னஞ்சல் நாள்.02.11.2026.

3. கல்வி மேலாண்மை தகவல் முறைமை இணையதளம் மூலம் இவ்வியக்கக பெறப்பட்ட நாள்.02.11.2026. (EMIS) மின்னஞ்சலில்

4. இவ்வியக்கக இதே எண்ணிட்ட செயல்முறைகள். .05.11.2026

பார்வையில் காணும் சமூக நல இயக்குநரின் கடிதத்தில், 2026-27ஆம் கல்வியாண்டிற்கு விஜயதசமிக்கான மாணவ/மாணவியர்கள் சேர்க்கையும் முடிவுற்றிருக்கும் என்பதால், இவ்வாண்டிற்கான 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை சேர்ந்துள்ள மாணவ,மாணவியர்களுக்கான இறுதி தேவைப்பட்டியலினை வழங்கிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக சேர்ந்துள்ள மாணவ / மாணவியர் அளவெடுத்திட ஏதுவாக தரவுகளை EMIS portal-ல் பதிவேற்றம் செய்து வழங்கிடவும் கோரப்பட்டுள்ளது. 

மேற்காண் பொருள் சார்ந்த விவரங்கள் மாநில திட்ட இயக்ககத்திடம் பார்வை (2)இல் காணும் இவ்வியக்கக மின்னஞ்சல் மூலம் கோரப்பட்டதின் அடிப்படையில் பார்வை (3)இல் காணும் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளம் மூலம் EMIS portal.do பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களின் எண்ணிக்கை விவரம் பெறப்பட்டுள்ளது.

எனவே, 2026-27 ஆம் கல்வியாண்டிற்கு 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதியதாக சேர்ந்த மாணவ/மாணவிகள் சேர்க்கையின் அடிப்படையில் சீருடைகள் அளவுகள் எடுப்பதற்கு ஏதுவாக மாணவ/மாணவிகள் விவரங்கள் சமூக நல இயக்ககத்திற்கு அனுப்பும்பொருட்டு, பள்ளிகளில் புதியதாக சேர்ந்த சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவ/மாணவிகள் விவரங்களை 05.11.2026 காலை 11.00 மணிக்குள் EMIS portalல் உடனடியாக பதிவேற்றம் செய்ய வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் அலுவலர்களுக்கு (தொடக்கக்கல்வி) பார்வை (4)இல் காணும் செயல்முறைகள் மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாளதுவரையில் பள்ளிகளில் புதியதாக சேர்ந்த சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவ/மாணவிகள் விவரங்கள் EMIS portal-ல் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. இனியும் காலந்தாழ்த்தாது உடன் இன்றே இப்பணியினை முடிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

மேலும், EMIS portal-ல் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் பதிவேற்றம் செய்யாமல் விடுப்பட்டாலோ அல்லது மாணவர்களுக்கு சீருடைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலோ அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர். வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலரே முழுப்பொறுப்பேற்க நேரிடும் எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு. EMIS-லிருந்து பெறப்பட்ட EMIS portal-ல் பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களின் எண்ணிக்கை (மின்னஞ்சல் மூலம்)

தொடக்கக் கல்வி இயக்குநர்

13-11-26


பெறுநர்

1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)-மின்னஞ்சல் மூலமாக.

2 அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மூலமாக)





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive