OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெற புதிய நடைமுறை

 பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெற புதிய நடைமுறை அமல்

2 ஆண்டுகளுக்கு மேல் காலதாமதமானால் நீதிமன்ற உத்தரவு கட்டாயம் – அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகள்

பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை காலதாமதமாகப் பதிவு செய்வதற்கான புதிய விதிமுறைகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.

இதன்படி, 21 நாட்களுக்குள் பிறப்பு, இறப்புப் பதிவாளரிடம் பதிவு செய்யலாம். 21 முதல் 30 நாட்களுக்குள் தாமதக் கட்டணத்துடன் பதிவு செய்ய வேண்டும். 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் உரிய அதிகாரியின் அனுமதியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக நடுவரின் உத்தரவும் பெற வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காலதாமதமான பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகளுக்கு, இனி சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் (JMFC) நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக, பதிவு செய்யப்படவில்லை என்பதற்கான சான்று (NAC), மருத்துவமனை ஆவணங்கள், அடையாள ஆவணங்கள், குடும்ப அட்டை, காலதாமதத்திற்கான காரணம் குறித்த பிரமாணப் பத்திரம் உள்ளிட்ட ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். பிறப்புப் பதிவுக்கு பள்ளிச் சான்றிதழும், இறப்புப் பதிவுக்கு அடக்கம் அல்லது தகனம் செய்ததற்கான ஆதாரமும் கோரப்படலாம்.

இந்தப் புதிய நடைமுறைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அருக்காணி, மதிநிறைசெல்வன், எம். ராதா ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில் அக்டோபர் 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் சொத்துரிமை, வாரிசுரிமை, பாஸ்போர்ட், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சட்ட மற்றும் அரசு நடைமுறைகளுக்கு அவசியமானவை என்பதால், பொதுமக்கள் உரிய காலத்திற்குள் அவற்றைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive