Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
அன்பார்ந்த ஆசிரியர்கள் / நண்பர்களே தங்களின் மேலான கவனத்திற்கு!
மத்திய அரசு நாடு முழுவதும் மொத்தமாக தொகுப்பு எஸ்.எம்.எஸ் (GROUP SMS) அனுப்ப 15 நாள்களுக்கு தடை விதித்துள்ளது. ஆகையால் நம்முடைய www.Padasalai.Net வலைதளம் PadasalaiSMS என்ற பெயரில் வழங்கும் இலவச குறுந்தகவல் சேவை, அரசால் நாடு முழுவதும் தடை நீக்கப்படும் வரை தங்களுக்கு வராது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இத்தடையால் ஒரே தடவையில் 5 SMSக்கு மேல் அனுப்ப முடியாது.
ஆனால் நம்முடைய சேவை இணையதளத்தில் (UPDATE) தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி அரசால் வெளியிடப்பட்டுள்ள இத்தடைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மதிப்பெண் சான்றிதழை 29 மற்றும் 30 தேதிகளில் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். செப்டம்பர், அக்டோபர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை அரசு தேர்வுகள் இயக்குனரகத்தை அணுகவேண்டாம் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் திருமதி தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
SSLC SUPPLEMENTARY EXAM RESULTS
ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் மறுகூட்டல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்
பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, மதிப்பெண் மாற்றம் கண்ட மாணவ, மாணவியருக்கு, தேர்வுத்துறை இயக்குனரகத்தில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 17, 18), புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிற்குப் பின், மறுகூட்டல் கோரி மாணவ,






