முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர் நீதிமன்றம், மதுரை
கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை காலை
ஆலோசனை நடத்துகின்றனர்.
Guides / Study Materials Download
தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து: மறுதேர்வு நடத்த உத்தரவு
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வில்,
அச்சுப்பிழையுள்ள கேள்விகள் இடம்பெற்றதால், அதை ரத்து செய்த மதுரை ஐகோர்ட்
கிளை, மறு தேர்வு நடத்த உத்தரவிட்டது.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்
அனைத்து ஆசிரியர்களும், 2016 க்குள், தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற்றிக்க வேண்டுமென, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டதால்,
தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சர்வர் பிரச்னையால் பள்ளி விவர சேகரிப்பு பணியில் தேக்கம்
பள்ளி விவரம் சேகரித்து, ஆன்-லைனில் பதிவேற்றும் பணியில், சர்வர்
பிரச்னையால், பல மடங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால், பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தனித்தேர்வு எழுதிய பின் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம்....
மதுரையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய பின், சம்பந்தப்பட்ட
மாணவரின் விண்ணப்பத்தை நிராகரித்து தேர்வுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
இது, தனித்தேர்வாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
தமிழகத்தில் உள்ள, சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை பெற,
விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு
உள்ளது.
October Month CRC - Proceeding
அக்டோபர் மாதம் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கு குறுவள மையங்களில் நடத்தப்பட உள்ள """"சமூக விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு"" சார்ந்த மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது
முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு.
முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 21.7.2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர்.
10ம் வகுப்பு செய்முறை தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
"மார்ச்சில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள
தனித்தேர்வர்கள், அதற்கான செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, இன்று
முதல் அக்.,15 வரை விண்ணப்பிக்கலாம்," என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர்
தேவராஜன் தெரிவித்துள்ளார்.
15 ஆண்டாக உயர்த்தப்படாத விளையாட்டு நிதி: மாணவர்கள் வளர்ச்சி தடைபடும் அவலம்
கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்குரிய
விளையாட்டு நிதி அதிகரிக்கப்படாததால், வட்டார விளையாட்டுடன், மாணவர்கள்
நடையை கட்டும் நிலை தொடர்கிறது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு
இவ்வழக்கு திங்கள்கிழமை 30தேதி காலையிலேயே
10வது வழக்காக விசாரணை செய்யப்பட்டது. இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல்
ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு
கல்வியியல் பட்டப்படிப்பு (பிஎட்) படித்துப்
பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க
ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு
வாரியத்தால் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுக்குறித்து, இன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வுக்காக ஆசிரியர்கள் தவிப்பு
போதிய தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி
உயர்வு,தேர்வு புறக்கணிப்பு, பணப்பலனின்றி 6,875 ஆசிரியர்கள்
தவிக்கின்றனர்.
எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம் கணிதத்திற்கு இணையானது
GO.190 Higher Education Dept Dt.27.09.2013 – Equivalence of Degree – M.Sc. Statistics awarded by University of Madras as equivalent to M.Sc. Mathematics – Recommendation of Equivalence Committee – Orders – Issued.
"எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது" என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.Express Pay Order
தொடக்கக் கல்வி - RTE 2009ன் படி அகஇ கீழ் தோற்றுவிக்கப்பட்ட 3565 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 1581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 02.12.2012 முதல் 31.12.2013 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு
தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
பள்ளிகளுக்கு
வழங்கப்பட்டுள்ள நூலக புத்தகங்களைக் கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பு திறனை
மேம்படுத்த தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி
அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.
நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்டம்
மாணவர்களின் கணித திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நடுநிலைப் பள்ளிகளில்,
கணித ஆய்வகங்களை நிறுவ கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கணித கற்றல் திறனை
வலுப்படுத்துதல் திட்டம் மூலம் ஆய்வக கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: "ஸ்லோ லேனர்ஸ்" பட்டியலிட உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும், கற்றல் திறன்
குறைவாக உள்ள மாணவர்களை பட்டியலிட, சி.இ.ஓ., அய்யண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
பார்வையற்ற மாணவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
சென்னையில், 12 நாட்களாக நடத்திய போராட்டம், நேற்று முடிவுக்கு வந்தது.
மதிய தூக்கம் மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும்
பகலில் ஒரு மணி நேரம் வரை தூங்கினால், மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எவ்வித குறைவும் ஏற்படாமல் செப்டம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு
தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் திட்டம் - 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு இரண்டாம் பருவ பாடநூல்கள் பள்ளிகளுக்கு 20.09.2013 விநியோகம் செய்து அறிக்கை அனுப்ப உத்தரவு
காலாண்டு விடுமுறையில் அலுவலக பணி அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி
காலாண்டு தேர்வு விடுமுறையில், தொடர்ந்து
ஆன்லைன் அலுவலக பணி, ஆசிரியர்களுக்கு திணிக்கப்படுவதால், கடும் அதிருப்தி
அடைந்துள்ளனர்.தமிழகத்தில் முதல் பருவத்தேர்வு முடிவடைந்து, அக்டோபர், 2ம்
தேதி வரை, அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை
நாளில், பவர் ஃபைனான்ஸ் தொடர்பான ஆன்லைன் பணிகளை மேற்கொள்ளும்படி,
உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்திவைப்பு, இறுதி தீர்ப்பு வரும் வரை பணி மாறுதல் நிறுத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இரட்டைப் பட்டம்
சார்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர்
அடங்கிய முதன்மை அமர்வின் முன் இன்று பிற்பகல் 3.45மணிக்கு விசாரணைக்கு
வந்தது.
இயக்குநர் உத்தரவு
தொடக்கக் கல்வி - 2013-14 பகுதி II திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வழங்க, பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குநர் உத்தரவு
ECS மூலம் பணம் சேரும் வகையில் பட்டியல் தயார் செய்து அனுப்ப உத்தரவு
செப்டம்பர் / அக்டோபர் 2013 - மேல்நிலை / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் தேர்வு மையங்களுக்கான மதிப்பூதியம், உழைப்பூதியம் மற்றும் சில்லறை செலவினங்கள் அந்தந்த தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களின் வங்கி கணக்கில் ECS மூலம் பணம் சேரும் வகையில் பட்டியல் தயார் செய்து அனுப்ப உத்தரவு
கூட்டணியின் இரண்டாம் நாள் சாலை மறியல் போராட்டம் 4550 ஆசிரியர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இரண்டாம் நாள் சாலை மறியல் போராட்டம் 4550 ஆசிரியர்கள் பங்கேற்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிப்பு
மத்திய
அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள். இந்த
ஊதியக் குழுவை அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்
அளித்துள்ளதாகவும், 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து இதன் பரிந்துரைகள்
அமலுக்கு வரும் என்றும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றில்
புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
டிஇடி தேர்வு விவகாரம் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பட்டதாரிகள் மேல்முறையீடு
இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி
ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினகுமார் கூறியதாவது: ஆசிரியர் பணிக்கு தகுதியான
பி.எட் முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த 30 ஆயிரம்
பட்டதாரிகளுக்கு கடந்த 2010&ம் ஆண்டு மே மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம்
சான்று சரிபார்ப்பு செய்தது. அதில் 22 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக
நியமிக்கப்பட்டனர்.
Newly Upgraded 50 High Schools Information
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவு
BRTE மற்றும் CRTEs விவரங்கள்
SSA - ஒவ்வொரு மாவட்டத்ததிலும் அனுமதிக்கப்பட்ட BRTE மற்றும் CRTEs விவரங்கள் வருடவாரியாக இன்று காலை 10.30க்குள் அனுப்ப மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
Primary CRC - 05.10.2013 & Upper Primary CRC -12.10.2013
"UNDERSTANDING SIMPLE SCIENCE CONCEPTS THROUGH EXPERIMENTS & PROJECTS" என்ற தலைப்பில் 40% தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 05.10.2013 அன்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 12.10.2013 அன்றும் குறுவள மையப் பயிற்சி நடத்த SSA உத்தரவு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு, 01.01.2016 முதல் அமுலுக்கு வருகிறது
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள
கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.










