Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம்

          ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் முறையை எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம், நாளை நடத்தப்படும் என, போராட்டம் நடத்துவோர் தெரிவித்தனர்.

        ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டும், ஆசிரியர் தேர்வு செய்யப்பட வேண்டும்; வெயிட்டேஜ் முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் 10 நாட்களுக்கும் மேலாக, ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

         சென்னை, கல்வித்துறை வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்கள் கூறுகையில், "வெயிட்டேஜ் முறையை எதிர்த்து 5ம் தேதி (நாளை), எங்கள் சான்றிதழ்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைப்போம். மேலும், வாக்காளர் அடையாள அட்டையை, தேர்தல் ஆணையத்திடம் வழங்கவும் முடிவு செய்துள்ளோம்" என்றனர்.




4 Comments:

  1. முன்பு பொன்னையன் போன்றவர்கள் அம்மாவுக்குத் தவறானத் தகவல்களைத் தந்தார்கள்,இந்தமுறையும் ஒரு சில அதிகாரிகள் தவறானத்த கவல்களைத்தருவதால்.அம்மா ,கவனமாக இருக்கவும்.நல்ல முடிவைத்தாருங்கள்.

    ReplyDelete
  2. போராளிகளே நான் சென்னையை நோக்கி கிளம்ப தயாராகி விட்டேன். தமிழக அரசு இதுவரை தன் நிலையிலிருந்து சிறிதும் இறங்கி வந்ததாகத் தெரியவில்லை. நமது கோரிக்கைகளை செவிமடுக்கவும் தயங்குகிறது. வாருங்கள் தோழர்களே சென்னையை நோக்கிப் பயணத்தைத் தொடங்குங்கள். நாளை நாம் ஒற்றுமை நீதிமன்றமே யோசிக்கக்கூடிய அளவிற்கு இருக்க வேண்டும். இந்த ஆசிரியர் தினம் ஒட்டு மொத்த தமிழகமே நம்மைத் திரும்பி பார்க்கக் கூடிய அளவில் இருந்திடல் வேண்டும். இனியும் என்ன தயக்கம்! இழப்பதற்கு ஒன்றும் இல்லை. நாளை தமிழக அரசு தடையாணையை ரத்து செய்து, சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அவசர அவசரமாக பணி நியமன ஆணைகளை வழங்கி திங்கட்கிழமை காலையில் அனைவரையும் பணியில் சேர உத்தரவிட இருப்பதாக தகவல் வருகிறது

    ReplyDelete
  3. அம்மா ... அதிகாரிகளின் தவரான வழிகாட்டுதலால். weightage முறையை அறிவித்தீர்கள்.... தற்போதாவது நியாயத்தை. உணர்ந்து. இந்த முரையை இரத்து செய்ய ஆனையிடுங்கள் அம்மா......

    ReplyDelete
  4. Tomorrow court stay order cancel agum.pani niyamanam thodangum.Pathikkappatta teachers ku nalla mudivaiyum arasu arivikkum.Dont worry all teachers.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive