பிப்ரவரி 10-ந்தேதிக்குள் ஆங்கில எழுத்துக்களை உச்சரிக்க சி.டி.க்கள்!

              மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க தேவையான சி.டி.க்கள், கையேடுகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஆங்கில எழுத்துக்களை உச்சரிக்க சி.டி.க்கள்

தமிழ்நாட்டில் கல்வியின் தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஆகியோர் பள்ளிக் கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆங்கில வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும் என்று நினைத்து அதற்காக அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு ஆங்கிலத்தில் ஒவ்வொரு இடத்திலும் எப்படி உச்சரிக்கவேண்டும். என்று சி.டி.க்கள் தயாரித்தனர்.

மொத்தம் 43 வகையான சி.டி.க்கள் தயாரித்து அதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் தொடக்க கல்வி இயக்குனரகம் அனுப்பி உள்ளது. மேலும் அதற்கான கையேடுகளையும் அனுப்பி இருக்கிறது.

பிப்ரவரி 10-ந்தேதி

இந்த சி.டி.க்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த பள்ளியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள எல்.சி.டி. புரஜக்டரில் போட்டு மாணவ-மாணவிகளிடம் காண்பித்து அவர்களை கற்க வைக்கலாம். அல்லது பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள லேப்டாப்பில் போட்டும் காண்பிக்கலாம்.

தற்போது இந்த சி.டி.க்கள் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கும் தொடக்கப் பள்ளிக் கல்வி இயக்குனரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் அந்த சி.டி.யை காப்பி எடுத்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பிப்ரவரி 10-ந்தேதிக்குள் அனுப்பவேண்டும் என்று இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

கையேடுகள்

அந்த சி.டி.யை பெற்றுக்கொள்ளும் தலைமை ஆசிரியர்கள், அந்த பள்ளியில் 1-வது வகுப்பு முதல் 5-வது வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அதை காப்பி எடுத்து கொடுப்பார். சி.டி.யை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள், அவர்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகளில் எல்.சி.டி. புரஜெக்டரில் போட்டு காண்பித்து அதன்படி ஆங்கிலம் உச்சரிக்க வைக்கலாம். இதற்குதான் கையேடுகளும் அனுப்பப்பட்டுள்ளன. அந்த கையேடுகளை பார்த்தும் மாணவர்களுக்கு ஆங்கில எழுத்துக்களை உச்சரிக்கலாம்.

இந்த சி.டி.க்களை மாணவர்களே தங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் போட்டும் ஆங்கில உச்சரிப்பை கற்றுக்கொள்ளலாம்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive