முதியோர் உதவித்தொகை பெற ஆதார் அட்டை: தகுதியுள்ள பயனாளிகளை கண்டுபிடிக்க முடிவு

          முதியோர் உதவித் தொகை பெற ஆதார் அடையாள பதிவு எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தகுதியுள்ள பயனாளிகளை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

            முதியோர் உதவித்தொகை அ.தி.மு.க, ஆட்சி அமைந்தவுடன் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அன்றிலிருந்து உதவிதொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது. சரியான பயனாளிகளை தேர்வு செய்யாததால் இன்றுவரை குழப்பம் நீடிக்கிறது. 

            எண்ணிக்கையை குறைக்க அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தகுதியுள்ள பயனாளிகள் பலர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் உதவித் தொகை பெற ஆதார் அடையாள அட்டை பதிவு எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த எண் உள்ள பயனாளிகளின் விபரங்களை அவர்கள் கணக்கு உள்ள வங்கி மற்றும் தபால் அலுவலகம் மூலம் வருவாய்த் துறையினர் பதிவு செய்து வருகின்றனர். இதற்கான பணிகள் ஜன.27 முதல் பிப். 20 வரை நடைபெறுகிறது. ஆதார் அட்டை உள்ளவர்கள் அதன் நகலுடன், அட்டை கிடைக்காதவர்கள் ஒப்புகை சீட்டுடன் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலக மையத்திற்கு சென்று பதியவேண்டும். 

ஆதார் அட்டை பதிவு செய்யாதவர்கள் தாலுகா அலுவலக சிறப்பு மையத்திற்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு அசல் ஆவணங்களுடன் செல்லவேண்டும். அங்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மனுவை பூர்த்தி செய்து, ஆதார் அட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதார் எண் மூலம் வரும்காலத்தில் தனிநபர் ஒருவரின் வருமானம், சொத்து, தொழில் பதிவு செய்யும்போது முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை குறையும். உண்மையான பயனாளிகளை பயன்பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive