ஆசிரியர் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்

            இரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மேல்நிலைத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களுக்கு விடைத்தாளின் ஒளி நகல் வழங்குவதுபோல் தற்போது ஜுன் 2014 முதல் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் /  தனித் தேர்வர்களும் பயன் பெறும் வகையில் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும், விடைத்தாளின் நகல் பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள தேர்வர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

              இந்த அரிய வாய்ப்பின் மூலம் தங்களின் விடைத்தாட்கள் சரியாகத் திருத்தப்பட்டுள்ளனவா என்று அறிந்துகொள்ள விரும்பும் மாணவ / மாணவிகளின் விடைத்தாட்களின் ஒளி நகல் பெற

www.tndge.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து கொண்டு, பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தொகையை கீழ்க்குறிப்பிட்ட நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி ஆன்லைன்  மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்  - 02.02.2015 திங்கட்கிழமை முதல் 6.02.2015 வெள்ளிக்கிழமை வரை

• தற்போது புதிதாக விடைத்தாள் நகல் நாட்களில்  மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து தற்போது விடைத்தாள் நகல் வேண்டி விண்ணப்பிப்பவர்கள்.  ஒரு பாடத்திற்கு ரூ.70/- 

• 30.12.2014 முதல் 05.01.2015 வரை விடைத்தாளின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.275/- ஒரு பாடத்திற்கு ரூ.205/- செலுத்த வேண்டும்.

மறுகூட்டல் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலேயே கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு  அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

வரிசை எண் 1 மற்றும் 2ல் குறிப்பிட்ட  தேர்வர்கள் ஆன்லைன் கட்டணம் ரூ.50/- கூடுதலாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06.02.2015 மாலை 5.00 மணி வரை.

ஜூன் 2015 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு வருகை புரியவிருக்கும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive