வரும் கல்வியாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் ரெடி

          வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இலவச பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு வந்துள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைக்க, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


கடந்தாண்டு ஜூனில் பள்ளி திறக்கப்பட்டதும், சில பள்ளிகளில் பிளஸ் 2 பாடப்புத்தகங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் அவதிப்பட்டதாக புகார் எழுந்தது. இப்பிரச்னையை தவிர்க்க வரும் கல்வியாண்டில் (2015 - 16) பள்ளி வாரியாக தேவைப்படும் பாடப்புத்தகங்கள் எண்ணிக்கை குறித்து அறிக்கை அனுப்புமாறு முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு சில மாதங்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது. 

அதற்கேற்றவாறு தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் இருந்து மாவட்ட தலைநகரங்களுக்கு தமிழ், ஆங்கிலவழி புத்தகங்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைத்து கல்வி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 1 பாடப்புத்தங்களும் விரைவில் வரவுள்ளன. மேல்நிலை மாணவர்களுக்கு காலதாமதம் இன்றி புத்தகம் கிடைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive