இந்திய ராணுவ தொழிற்சாலையில் பல்வேறு பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

              இந்திய ராணுவத்திற்குத் தேவையான தளவாட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில்
ஒன்றான மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத்தில் செயல்பட்டு வரும் ராணுவ தளவாட தொழிற்சாலையில் காலியாக உள்ள குரூப்-பி, குரூப்-சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்:
பணி: தீயணைப்பு வீரர்
பணி: சமையலர்
பணி: டெலிபோன் ஆபரேட்டர்
பணி: எலக்ட்ரீசியன்
பணி: பிட்டர்
பணி: கிரைண்டர்
பணி: டர்னர்
பணி: வெல்டர்
பணி: எக்சாமினர்
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. எஸ்சி, எஸ்டி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ofb.gov.in   என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ofb.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive