கிராம சுகாதார நர்ஸ் பணி பட்டியல் உயர்நீதிமன்றம் உத்தரவு

       உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி தனம் தாக்கல் செய்த மனு:

         பி.எஸ்சி.,நர்சிங், பல்நோக்கு மருத்துவப் பணியாளர் (உதவி நர்சிங்) ஓராண்டு படிப்பு முடித்துள்ளேன். சென்னை ராஜிவ் அரசு பொது மருத்துவமனையில் 6 மாதங்கள் பயிற்சி முடித்தேன். விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கிராம சுகாதாரநர்ஸ் பணிக்கு தகுதியானவர்களின் பெயர்கள் தற்காலிக பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என சரிபார்த்துக் கொள்ள 2015 அக்.,1 ல் அறிவிப்பு வெளியிட்டார்.


எனக்கு உரிய தகுதி இல்லை எனக்கூறி, சென்னை வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித்துறை இயக்குனருக்கு அனுப்பிய தற்காலிக பட்டியலில் எனது பெயரை விருதுநகர் வேலைவாய்ப்பு அலுவலர் பரிந்துரைக்கவில்லைஎனது பெயரை நிராகரித்த, வேலைவாய்ப்பு அலுவலரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனது பெயரை தற்காலிக பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, தனம் மனு செய்திருந்தார்.

நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவு:

பல்நோக்கு மருத்துவப் பணியாளர் படிப்பிற்கு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனரின் சான்று பெறவில்லை என நிராகரித்துள்ளனர்.மனுதாரருக்கு தகுதி இல்லை என தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இதனால், மனுதாரருக்கு வாய்ப்பு பறிபோகிறது. தற்காலிக பட்டியலில் மனுதாரர் பெயரை சேர்க்க மறுத்து ஜன.,7 ல் விருதுநகர் வேலை வாய்ப்பு அலுவலர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.கிராம சுகாதார நர்ஸ் பணிக்கு தகுதியானவர்களின் தற்காலிக பட்டியலில், மனுதாரர் பெயரை சேர்த்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என்றார்.மனுதாரர் வழக்கறிஞர் விராலிநாதன் ஆஜரானார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive