பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து வைப்பு: குடியரசுத் தலைவர் உத்தரவ

                    குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதிக்கு பிந்தைய கால செலவினத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்க ஏதுவாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டுள்ளது.
 இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை இரவு பிறப்பித்துள்ளார்.

        உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிந்தைய கால செலவினங்களுக்கு அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. இந்த நிதியை ஒதுக்க மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். இதற்கு போதிய அவகாசம் இல்லாததால், அவசரச் சட்டத்தை மத்திய அரசால் பிறப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
       இந்நிலையில், தில்லியில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், உத்தரகண்ட் மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்க ஏதுவாக மக்களவையில் பட்ஜெட் கூட்டத் தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
 இதேபோல், மாநிலங்களவையில் எதிரிச் சொத்து சட்டத் திருத்த மசோதா நிலுவையில் இருப்பதால், அதுதொடர்பான அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க ஏதுவாக அந்த அவையிலும் பட்ஜெட் கூட்டத் தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்ள கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
 பிரணாபுடன் வெங்கய்ய நாயுடு சந்திப்பு: இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சந்தித்து விவரங்களை எடுத்துரைத்தார்.
 இதையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்கூட்டியே முடித்து வைப்பதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை இரவு பிறப்பித்தார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive