NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காதது ஏன்? - கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காதது ஏன்?

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாததற்கு மத்திய அரசு செவி சாய்க்காததே காரணம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது பேசிய அதிமுக கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு, பணிப் பதிவேடு பராமரித்தல் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அவர்களின் ஊதியத்தை ரூ. 15 ஆயிரமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும் என்றார்
இதற்குப் பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது
பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) கீழ் பள்ளிகளில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். வாரத்தில் மூன்று நாள்களுக்கு மட்டுமே அவர்களுக்கு பணி வழங்கப்படும். அதுவும் ஒரு நாளில் அவர்கள் 2 மணி நேரம் மட்டுமே பணிபுரிவர்
இருந்தபோதும், இவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் வகையில், கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசிடம் பேசியபோது அதற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை என பதிலளித்தார்
இந்தத் திட்டத்தின் கீழ் பலர் தொலைதூரத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களை, அவர்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.




12 Comments:

  1. Ieduyalam oru reason ahh da una yalam amichar nu sola vea kevala ma iruku plz resione our job adu thu varavanaavadu nala help panuvaa me 7000 vaangitu family ahh run pana mudiuma

    ReplyDelete
  2. இரண்டு மணி நேரத்திற்கு 7000 கொடுப்பது பெரிய விஷயம்
    IT யில அவனவன் எத்தனை மணி நேரம் உழைத்து எவ்வளவு சம்பளம் வாங்குகிறான் என்று தெரியுமா

    ReplyDelete
    Replies
    1. ungalukku theriuma 2 hrs nu. 4.30 ku enthiruchu veetu velaiya mudichittu bus ah pudikka 6.45 ku kilambi 2.30 hrs travel panni. 9.30 ku prayer mudichu. 12.45 ku schl mudium. again 2.15 ku than bus. antha bus ah pudichu veedu vanthu sera 5.30 agum. 9.30 to 12.30 continues class irukum. 4.30 ku enthiruchu nanga mrng breakfast edukka 10.clk agum. so theriama pesatheergal. 2500 monthly busku agum selavu.

      Delete
    2. வெறும் 2 மணி நேரம் இல்ல 12 அரை நாள் என்று சொல்லி அவங்க தேவை பட்டப்ப எல்லாம் வேலை வாங்குவாங்க. அரசு வேலை என்று நம்பி வந்து ஏமாற்றம் மட்டும் தான் மிச்சம். நீங்களும் வாங்க படு ஈசியா 7000 வாங்கலாம். இந்த சம்பளத்துக்கு தலைமை கையெழுத்து பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் கையெழுத்து எல்லாம் வாங்கி சம்பளம் வர மாதம் ஏழு தேதி முடிந்து விடும். பால் கேஸ் வாடகை மளிகை எல்லாருக்கும் பதில் சொல்லலாம்.

      Delete
    3. வெறும் 2 மணி நேரம் இல்ல 12 அரை நாள் என்று சொல்லி அவங்க தேவை பட்டப்ப எல்லாம் வேலை வாங்குவாங்க. அரசு வேலை என்று நம்பி வந்து ஏமாற்றம் மட்டும் தான் மிச்சம். நீங்களும் வாங்க படு ஈசியா 7000 வாங்கலாம். இந்த சம்பளத்துக்கு தலைமை கையெழுத்து பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் கையெழுத்து எல்லாம் வாங்கி சம்பளம் வர மாதம் ஏழு தேதி முடிந்து விடும். பால் கேஸ் வாடகை மளிகை எல்லாருக்கும் பதில் சொல்லலாம்.

      Delete
    4. Losu unaku enna theriyum

      Delete
    5. நீங்க வந்து பார்த்திங்களா இரண்டுமணிநேரம் என்று...தவறாக பேசாதீர்கள்...

      Delete
  3. அமைச்சரின் பதில் வேதனையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது...

    ReplyDelete
  4. அமைச்சரின் பதில் வேதனையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது...

    ReplyDelete
  5. Central government approval oda than MLA salaries high akiningala

    ReplyDelete
  6. 2 hours empathu thavarana thagaval..,nerya school a part time teachers( gents) than all out door works pakkuranga...half day work enpathuthan sari ya na thagaval

    ReplyDelete
  7. அமைச்சரின் பதில் வேதனையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive