மேல்நிலைப்பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
பேரவையில் தெரிவித்துள்ளார்.
தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து சேலம்
தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் பேரவையில் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்க
புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், மாணவர்கள் 12ம் வகுப்பு
முடித்தவுடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் வேலைவாய்ப்பு
ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வித்திட்டத்தின்கீழ் புதிய திட்டங்கள், கட்டுபாடுகள்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய தொழிற்கல்வி
பாடத்திட்டங்களை புகுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக அரசு
பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு
குறிக்கப்படும் என தமிழ அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்
தற்போது மாணவர்களுக்கும் வருகைப் பதிவேட்டில் புதிய தொழில்நுட்பத்தினை
பள்ளிக்கல்வித்துறை புகுத்தவுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட்
அட்டைகளில் ஆதார் எண், ரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படு.
பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவினை மதியத்திற்குள் சென்னை தலைமை
அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து விடும்படி தொழில்நுட்ப நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...