கர்நாடகாவில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி
வழங்கப்பட மாட்டாது என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடக மாநில அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கைக் குறைந்து வரும் நிலையில்,இந்த ஆண்டு 2,429 புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
கர்நாடக மாநில அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கைக் குறைந்து வரும் நிலையில்,இந்த ஆண்டு 2,429 புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
இதையடுத்தே மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் அடிப்படையில், கர்நாடக மாநில அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாகக் குறைந்து வருகிறது. ஆரம்பத்தில், அரசுப் பள்ளி இல்லாத பகுதிகளில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை மாநில அரசு பரிசீலித்தது. ஆனால், தனியார் பள்ளிகள் துவக்குவதை தடுத்து, அரசுப் பள்ளிகளை பலப்படுத்த புதிய முடிவை எடுத்துள்ளது.
புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதற்கு பதிலாக, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், நவீன வசதிகளுடன் கூடிய அரசுப் பள்ளிகளைத் துவக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவேற்க்கத்தக்க முடிவு! தமிழத்திலும் நடைமுறைப் படுத்த வேண்டும்.
ReplyDelete