Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

என்றும் இளமையுடன் இருக்க 8 உணவுகள்!

யாருக்குத்தான் எப்போதும் இளமையுடன் வாழ்வது பிடிக்காது.
நீங்கள் எப்போதும் இளமையுடன் இருந்தால் மற்றவர்களை காட்டிலும் தனியாக தெரிவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

எப்பொழுதும் இளமையுடன் இருக்க நீங்கள் உங்களின் உணவு பழக்கங்களை ஆரோக்கியமாக கடைபிடிப்பது மிகவும் அவசியம். நாம் இப்பொழுது சில முக்கிய உணவு வகைகளை பாப்போம்.

ஏன் விரைவில் வயதாகுகிறது?

நமது உடம்பில் ஆக்ஸிடேஷன் என்று சொல்லக்கூடிய செயல்பட்டால் உடலின் வயது மிகவும் வேகமாக அதிகரிக்கின்றது.இதனை தடுக்க கூடிய சக்தி ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்களுக்கு உண்டு. எனவே நீங்கள் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வருவதன் மூலம் வயதாவதை தள்ளி போடலாம்.

1. காய்கறிகள் மற்றும் பழ வகைகள்

காய்கறிகள் மற்றும் பழ வகைகளில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின் மற்றும் மினெரல்ஸ் நிறைந்துள்ளது.இவை உங்களை எப்போதும் இளமையுடன் வைத்திருக்க மிகவும் உதவும்.இவற்றை நிறைய அளவில் உட்கொண்டு வந்தால் உங்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

2. நிலக்கடலை

நிலக்கடலையில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி6, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்,ப்ரோடீன்,பொட்டாசியம், நல்ல கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் எப்போதும் இளமையாகவும், துடிப்பாகவும் வாழலாம்.

3. பாதம் பருப்பு

பாதாம் பருப்பில் அதிக அளவில் ப்ரோடீன், வைட்டமின் இ, பயோட்டின், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, காப்பர் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மிகுதியாக உள்ளது. இவை உங்களின் உடல் வயதாவதை தடுப்பதோடு முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.

4. போதுமான அளவு தண்ணீர்

தினமும் போதுமான அளவு நீர் அருந்துவது மிகவும் அவசியம். நமது உடல் 80 சதவீதம் நீரினால் ஆனது.சில சமயம் நீர்ச்சத்து குறைபாட்டால் வயதான தோற்றம் ஏற்படலாம்.எனவே தினமும் 2.5-3 லிட்டர் தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியம்.

5. க்ரீன் டீ

உடல் ஆரோக்கியத்தில் க்ரீன் டீ மிகவும் முக்கிய பண்பினை வகுக்கின்றது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், பிரீ ரேடிகள் என்று சொல்லக்கூடிய செல்லின் அழிவினை தடுத்து எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும்.மேலும் தினமும் க்ரீன் டி பருகி வந்தால் உங்கள் உடல் எடை குறைவதோடு சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும்.

6. ப்ரோடீன் உணவுகள்

நம்முடைய உடலின் இயக்கத்திற்கு புரதச்சத்து மிக மிக அவசியம்.தினமும் தேவையான அளவு ப்ரோடீன் உணவினை எடுத்துக்கொண்டு வருவதால் உங்களின் உடல் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

7. உடற்பயிற்சி

உணவு முறையை பின்பற்றுவதோடு உடற்பயிற்சியும் மிக மிக முக்கியம். தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நீங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடற்பயிற்சி உங்களின் இரத்த ஓட்டத்தை அதிக படுத்தி உடலினுள் உள்ள அணைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

8. நெல்லிக்கனி

நெல்லிக்கனியில் மிக மிக அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் பயோட்டின் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நெல்லிக்கனியை உட்கொண்டு வந்தால் எப்பொழுதும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.




1 Comments:

  1. அதிக ரசாயன உரம் போட்டு வளா்க்கப்படும் செடிகளில் உள்ள காய்கறிகளை நன்மைகள் குறைவு.வீடுகளில் மாடியில்தோட்டம் போட்டு காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். முருங்கை மரம் வீடுகளில் வளா்க்க வேண்டும்.அதிக அளவு முருங்கை கீரை காய் என்று பயன்படுத்த வேண்டும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive