அதிக சுவையானது மட்டுமல்லாமல், அதிக சத்து மிகுந்ததாகவும் வாழைப்பழம் இருக்கிறது. அதிக சத்து மிக்கதாக வாழைப்பழம் இருதாலும் அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுவதனால், உடலுக்கு சில தீமைகளும் ஏற்படுகிறது. அது குறித்த செய்தி...
1. மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது:
பழுக்காத வாழைப்பழத்தை அதிக அளவு சாப்பிடுவது மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. அதிக அளவு நார் சத்து இருப்பதால் குடலில் இருந்து அதிக தண்ணீரை உறிஞ்சுகிறது. இதனால், உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறைவது மட்டுமல்லாமல், செரிமான பிரச்சனைகளையும் உருவாக்குகிறது.
2. ஊட்டச்சத்து சமநிலையின்மை:
சீரான உடல்நிலையை பெற வேண்டுமானால், தினமும் இரண்டு கப் பழங்களை உட்கொள்ள வேண்டும். அதிகமாக வாழைப்பழங்களை மட்டும் எடுத்துக்கொள்வதால், மற்ற பழங்களை சாப்பிட உடல் ஒத்துழைக்காது. எனவே, வாழைப்பழங்களை குறைவான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
3.செரிமான கோளாறு:
சரியான அளவு நார்சத்து உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்வது செரிமான பிரச்சனைகள் வராமல் இருக்க உதவுகிறது. ஆனால், அதிக அளவு நார்சத்து உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்களை ஏற்கும் திறன் குறைந்துவிடுகிறது.
4. உடல் எடை அதிகரிப்பு:
வாழைப்பழம், அதிக கலோரிக்கள் உள்ள உணவு. நொறுக்குத்தீணிக்கு பதிலாக வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம், 300 கலோரிகளுக்கு அதிகமாக நம் உடலில் சேருகிறது. மற்ற பழ வகைகளை சாப்பிடாமல், வாழைப்பழம் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 2 வாழைப்பழங்களுடன் நிறுத்திக்கொள்வது நல்லது.
5.தூக்கக் கலக்கம் :
ட்ரிப்டோபான் என்ற ஒருவகை அமிலம் வாழைப்பழத்தில் இருப்பதால், நன்றாக தூங்குவதற்கு வாழைப்பழம் உதவுகிறது. மூளைக்கு செல்லும் அமினோ அமிலத்தை வாழைப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட் தடுக்கிறது. எனவே இதுவும் தூக்கத்தை ஏற்படுத்துகிறது.
6. பல் தொடர்பான பிரச்சினைகள்:
வாழைப்பழம், இனிப்பான பழம். இதில் இயற்கையாகவே சர்க்கரை சத்து இருப்பதால் பற்சிதைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், அதிக அளவு வாழைப்பழம் சாப்பிடுவது, பற்களின் எனாமலை சேதப்படுத்துவதாகவும் உள்ளது.
7.கொழுப்பு சத்து குறைவு:
வாழைப்பழங்களில் கொழுப்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது. ஆனால், நம் உணவில் சிறிதளவு கொழுப்புச்சத்து மிகுந்த உணவு பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனால், வாழைப்பழத்தை மட்டும் அதிகமாக உட்கொள்பவர்களின் உடலில் கொழுப்பு சத்து மிக குறைவாக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...