கோவை, வேளாண் படிப்புகளில், சிறப்பு இட ஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்களுக்கு, நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு
கல்லுாரிகள் மற்றும், 26 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில்,
12 இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.நடப்பு கல்வியாண்டுக்கான
இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்பம், இன்றுடன் முடிகிறது.
வேளாண் படிப்புகளில், நான்கு பிரிவினருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு
வழங்கப்படுகிறது.இதில், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு, எட்டு
இடங்கள், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, ஐந்து இடங்கள், மாற்றுத்
திறனாளிகளுக்கு, 30 இடங்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு,
ஓர் இடம் என, மொத்தம், 44 இடங்கள் சிறப்பு ஒதுக்கீட்டில்
அளிக்கப்படுகின்றன.இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நாளை துவங்கி, 20ம்
தேதி வரை நடக்கிறது. இதில், அனைத்து அசல் சான்றிதழ்களுடன், மாணவர்கள்
நேரில் பங்கேற்க வேண்டும் என, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» வேளாண் இட ஒதுக்கீடு: நாளை சான்றிதழ் சரிபார்ப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...