சிறப்பு குழந்தைகளுக்கான பி.எட்., படிப்பு

சென்னை:சிறப்பு குழந்தைகளுக்கான, பி.எட்., படிப்புக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்வி யியல் கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு, பி.எட்., பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. இதற்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிறப்பு குழந்தைகளுக்கான கற்பித்தல் பணியை மேற்கொள்ள, சிறப்பு, பி.எட்., ஆசிரியர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.
இந்த படிப்பை, வித்யா சாகர் என்ற தனியார்நிறுவனம் நடத்துகிறது. இந்த படிப்புக்கான அனுமதியை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வழங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகள் நடத்தப்படும், சிறப்பு, பி.எட்., படிப்பில், சிறப்பு குழந்தைகள் மற்றும் பல்வகை குறைபாடுள்ள மாணவர்களுக்கு கற்பிக்க, பயிற்சி தரப்படுகிறது.
இது குறித்த விபரங்களுக்கு, 98400 35203 என்ற எண்ணையோ, hrd@vidyasagar.co.in என்ற, இ - மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

Share this

0 Comment to " சிறப்பு குழந்தைகளுக்கான பி.எட்., படிப்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...