சத்துணவு ஊழியர்கள் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா கூறினார்.
சட்டப்பேரவையில் சமூக நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்
காங்கிரஸ் உறுப்பினர் பாண்டியன் பேசும்போது, சத்துணவு ஊழியர்கள் மற்றும்
அங்கன்வாடி ஊழியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றார்.
அப்போது அமைச்சர் சரோஜா குறுக்கிட்டுக் கூறியது: 32 மாவட்டங்களில் 22
மாவட்டங்களுக்கான சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கான காலிப் பணியிடங்களை
நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 10 மாவட்டங்களிலும்
நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...