நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.http://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வை, 13 லட்சம் மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். தமிழக மாணவர்கள் 1.07 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், இன்று காலை மனிதவள மேம்பாட்டுத்துறைச் செயலாளர் அனில் ஸ்வரூப், தனது ட்விட்டர் பக்கத்தில், `நீட் தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ இன்று வெளியிடும்’ என்று பதிவிட்டார். அதன்படி நீட் தேர்வு முடிவுகள் http://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் முன் கூட்டியே வெளியாகியுள்ளது.
கல்பனா குமாரி என்னும் மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவரின் மதிப்பெண் விவரங்கள்... இயற்பியலில் - 171/180, வேதியியல் - 160/180, உயிரியல் - 360 /360 மதிப்பெண் பெற்றுள்ளார். மொத்த மதிப்பெண் - 691/720 ஆகும்.
தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதிப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கலந்தாய்வு இம்மாதம் 12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...