அப்துல்கலாம் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அப்துல்கலாம் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 'அப்துல் கலாம் விருது' வழங்கப்படுகிறது
இவ்விருது, சுதந்திர தின விழாவில், முதல்வரால் வழங்கப்படும். விருது பெறுபவருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் காசோலை, எட்டு கிராம் தங்கப் பதக்கம், பாராட்டு சான்றிதழ் தரப்படும்.விருது பெற விரும்புவோர், சுயவிபரக் குறிப்பு மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், 'அரசு முதன்மை செயலர், உயர் கல்வித்துறை, தலைமை செயலகம், சென்னை - 600009' என்ற முகவரிக்கு ஜூலை, 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.'
விருது பெற தகுதியான நபரை, தமிழக அரசு நியமித்துள்ள தேர்வுக் குழு முடிவு செய்யும்' என, உயர் கல்வித்துறை முதன்மை செயலர், சுனீல் பாலீவால் அறிவித்துள்ளார்.
 
 

 

Share this

0 Comment to "அப்துல்கலாம் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...