இந்தியாவில் ஆதாரைப் போன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட பயோமெட்ரிக் திட்டத்தைக் கைவிடுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தியாவில் 2009ஆம் ஆண்டு ஆதார் திட்டம் தொடங்கப்பட்டது. குடிமக்களுக்கு தனித்தனி அடையாள எண் மற்றும் நாடுதழுவிய தரவுத்தளத்தை உருவாக்கும் நோக்கில் இது ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இந்தத் திட்டம் விரைவில் எல்லா நாட்டிலும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தத் திட்டத்திற்கு பல்வேறு நாடுகளில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய தனது பயோமெட்ரிக் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
`இன்னோவேசன் ஆஸ்திரேலியா' ஊடகத்திடமிருந்து கிடைத்த தகவலின்படி, ஆஸ்திரேலிய அரசு ரூ.40 மில்லியன் டாலர் செலவில் (இந்திய மதிப்பில் சுமார் 273 கோடி) தொடங்கிய பயோமெட்ரிக் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது தெரிவந்துள்ளது.
ஆஸ்திரேலிய குற்றவியல் புலனாய்வு ஆணையம்(ACIC) 46 மில்லியன் டாலர் செலவில் 2016ஆம் ஆண்டு இந்த பயோமெட்ரிக் திட்டத்திற்கான ஒப்புதலை என்இசி நிறுவனத்திடம் ஒப்படைத்தது. இந்தத் திட்டத்தில் ஆதாரைப் போலவே கைரேகைகள், முக அங்கீகாரம், மற்றும் பாதச் சுவடுகள் ஆகியவற்றைப் பதிவு செய்யப்படவிருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய அரசு இத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஆதார் திட்டம் தொழில்நுட்ப ரீதியாகவும், மனிதர்களின் தவறாலும் பல்வேறு சிக்கல்களை சந்தித்தபோதிலும், இந்திய அரசு விடாப்பிடியாக தொடர்ந்து இத்திட்டத்தை கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு தனிமனிதனின் அந்தரங்க விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பையும் ஆதார் வழக்கிலும் தொடர்புப்படுத்தி இன்னும் இறுதித்தீர்ப்பு வழங்கப்பவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...